• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பாரம்பரிய மருத்துவத் துறையின் வளர்ச்சித் திட்டம்
  2016-02-19 17:04:44  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன பாரம்பரிய மருத்துவம் மற்றும் மருந்து துறையின் 2016 முதல் 2030ஆம் ஆண்டு வரையான வளர்ச்சித் திட்டம் குறித்து அண்மையில் நடைபெற்ற சீன அரசவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

2020ஆம் ஆண்டுக்குள் அனைவரும் சீனப் பாரம்பரிய மருத்துவச் சேவையை அடிப்படையில் பெறலாம். அதோடு, சீனப் பாரம்பரிய மருத்துவத்தின் மருத்துவ அமைப்புமுறை மேம்படுத்தப்படும் என்று இத்திட்டத்தில் தெளிவுபடுத்தப்பட்டது. 2030ஆம் ஆண்டு வரை சீன மருத்துவம் மற்றும் மருந்து சேவை அனைவருக்கும் முற்றிலும் வழங்கப்படும் என்றும் இத்திட்டத்தில் இலக்கு வகுக்கப்பட்டுள்ளது.

தேசிய நிலையிலேயே சீன பாரம்பரிய மருத்துவம் மற்றும் மருந்துகளின் வளர்ச்சித் திட்டத்தை வகுப்பது இதுவே முதல்முறை.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040