போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2016ஆம் ஆண்டு கூட்டம் மார்ச் 22 முதல் 25ஆம் நாள் வரை ஹாய்நான் மாநிலத்தின் போ ஆவ் நகரில் நடைபெற உள்ளது. அப்போது 83 விவாத நிகழ்வுகள் நடைபெறும். மேலும், தொழில் நடத்துவோரின் பேச்சுவார்த்தை தொடர்பான 12 நிகழ்ச்சிகள் நடப்பு ஆண்டுக் கூட்டத்தில் புதிதாக நடத்தப்பட உள்ளன.
"ஆசியாவின் புதிய எதிர்காலம்:புதிய உயிராற்றல் மற்றும் புதிய விருப்பம்" என்பது நடப்பு ஆண்டுக் கூட்டத்தின் தலைப்பாகும்.