• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
'லியங்ஹுய் நேரம்'
  2016-03-03 19:13:48  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன எழுத்தில் '两会' அல்லது சீன மொழியில் 'லியங் ஹுய்' என்பது, சீனாவின் தேசிய மக்கள் பேரவை மற்றும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டுத் தேசிய கமிட்டியின் ஆண்டுக் கூட்டத் தொடர்களின் சுருக்கம் ஆகும்.

எனவே,இந்த இரு கூட்டத் தொடர்கள் ஆண்டுதோறும் நடைபெறும்போது, 'லியங் ஹுய்' நேரம் என்று கூறப்படுவது வழக்கம்.

குறிப்பாக, 2016ஆம் ஆண்டு, சீனாவின் 13-வது ஐந்தாண்டு வளர்ச்சித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் முதல் ஆண்டாகும். எனவே, இவ்வாண்டுக் கூட்டத் தொடர்களில், 13-வது ஐந்தாண்டு வளர்ச்சித் திட்டம் பற்றி முக்கியமாகவும் அதிகமாகவும் விவாதிக்கப்படும்.

தற்போது, 'சீனத் தயாரிப்பு 2025', 'இணையம்+', 'தொழில் தொடங்குதல், புதிதாக உருவாக்குதல்' ஆகிய திட்டங்கள் சீனாவில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. 13-வது ஐந்தாண்டு வளர்ச்சித் திட்டத்துடன் இணைந்து, இந்தத் திட்டங்கள், இவ்வாண்டுக் கூட்டத் தொடர்களில் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

அதேவேளையில், மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா ஆகிய திட்டங்கள் இந்தியாவிலும் செயல்பட்டு வருகின்றன.

சீனாவின் திட்டங்களும் இந்தியாவின் திட்டங்களுக்கும் இடையே ஒத்த மற்றும் வேறுபட்ட அம்சங்கள் பற்றி அறிய விரும்பினால், 'லியங் ஹுய் நேரம்' பற்றிய சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கவும்

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040