சீனத் தலைமை அமைச்சர் லீ கெச்சியாங் 5ஆம் நாள் வழங்கிய அரசுப் பணியறிக்கை, வெளிநாடுகளின் நிபுணர்கள் மற்றும் அறிஞர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பாகிஸ்தானில் புகழ்பெற்ற அரசியல் மற்றும் பொருளாதார ஆய்வாளர் அபித் சுலேஹ்ரி பேட்டியளிக்கையில், சீனாவின் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஏற்படும் புதிய ஆட்சிக் கண்ணோட்டம் இந்தப் பணியறிக்கையிலிருந்து முழுமையாக உலகிற்கு வெளிக்காட்டப்பட்டது என்று தெரிவித்தார்.
13ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தில், உள்நாட்டு உற்பத்தி மதிப்பு அதிகரிப்பு, வறுமை ஒழிப்பு, ராணுவச் செலவு குறைவு ஆகிய அம்சங்கள் முக்கியமானது என்று அவர் தெரிவித்தார். மேலும், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கட்டுமானம், சீனா மற்றும் அதன் அண்டை நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பை ஆற்றும். அதுமட்டுமல்லமால், உலகின் பிற நாடுகளுக்கும் பிரதேசங்களுக்கும் நன்மை ஏற்படுத்தப்படும் என்று அபித் சுலேஹ்ரி குறிப்பிட்டார்.