வேலூர் முனுகப்பட்டு ப.கண்ணன்சேகர்:
சீன தேசீய மக்கள் பேரவை, சீன அரசியல் கலந்தாலோசனை மாநாடு கூட்டத்தொடர் நடைப்பெற்று வருவதை நான் கவனித்து வருகிறேன். இதில் சீனத் தலைமையமைச்சர் லீக்கெச்சியாங் 5-ஆம் நாள் அரசுப்பணியறிக்கையை வழங்கியதையும் கேட்டேன். சீனத் தனிச்சிறப்பு வாய்ந்த பெரிய நாட்டின் தூதாண்மை கருத்துகளை நடைமுறைப் படுத்தும் போது, நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் நலன்களை சீனா தொடர்ந்து பேணிக்காக்கும் என்றும் லீக்கெச்சியாங் கூறியது, நாட்டின் மீது அவர் காட்டும் அக்கரையை உணரமுடிகிறது.