சீனாவின் 13ஆவது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் விவசாயிகளின் வருமானம் ஆண்டுக்கு சராசரியாக 6.5விழுக்காட்டுக்கு மேலாக அதிகரிக்கும் என்று சீன வேளாண் துறை அமைச்சர் ஹான் சாங்ஃப்பு 7ஆம் நாள் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இந்த இலக்கு நிறைவேற்றப்பட்டால், 2020ஆம் ஆண்டு சீன விவசாயிகளின் வருமானம் ஒரு மடங்கு அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.