ஜப்பானினின் யமனாஷி தன்னாட்சிப் பகுதியில் உள்ள தங்கும் விடுதி ஒன்று உலகின் மிகவும் பழமையான விடுதி என்று அறிவிக்கப்பட்டு, கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
இந்த தங்கும் விடுதி, கி.மு. 705 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. தற்போது வரை 52 தலைமுறைகள் தொடர்ச்சியாக இந்த விடுதியை பராமரித்து வருகின்றனர். இத்தங்கும் விடுதிக்கு அருகிலேயே. சுற்றுலா தலங்களான மௌண்ட் பிஜி, ஜிகோகுடனி குரங்கு பூங்கா ஆகியவை அமைந்துள்ளன. அதனால். இந்த விடுதியில் தங்குவதை பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் விரும்புகின்றனர். 35 தங்கும் அறைகள் கொண்ட இந்த விடுதியில், இதுவரை பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள் முதல் ராணுவத் தளபதிகள் வரை தங்கிச் சென்றுள்ளது, கூடுதல் பெருமையை ஏற்படுத்தியுள்ளது.
போர் நடைபெற்ற காலங்களில் இங்கு தங்குவது வாடிக்கையாம் இந்த விடுதியில் கிடைக்கும் உடலுக்கு இதமான அனுபவத்தை அளிக்கும் சூடான நீரூற்றே அதற்குக் காரணமாம். தற்போது, அதிக அளவு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கும் அதுதான் காரணம். அதை மேலும் பிரபலப்படுத்தும் வகையில், 888 மீட்டர் ஆழம் கொண்ட கிணறு தோண்டப்பட்டுள்ளது. தவிர, மலையின் அழகைப் பார்த்தவாறே குளிக்கும் வகையில் திறந்த வெளி குளியலறை, பயணிகளுக்கு மேலும் ஆனந்த்த்தை அளிக்கும்.
இந்த விடுதி, கடைசியாக 1997ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது. அப்போது, விடுதியின் பாரம்பரியம் கெடாத வகையில், சிற்சில மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டு, புதுப்பிக்கப்பட்டதாம். இந்த விடுதியில் கம்பியில்லா இணைய வசதி கிடையாது. விடுதியில் ஓர் இரவு தங்க, இரவு உணவு, காலை உணவு உள்பட சுமார் 16 ஆயிரம் ரூபாய்.