சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டுத் தேசிய கமிட்டியின் உறுப்பினரும், மனிதரை ஏற்றிச்செல்லும் விண்வெளிக் கலத்தின் திட்டப்பணியின் தலைமை வடிவமைப்பாளருமான சோஜியான்பீங் 8ஆம் நாள் சின்ஹுவா செய்தி நிறுவனத்தின் செய்தியாளருக்குப் பேட்டியளித்தார். அவர் கூறுகையில், 2020ஆம் ஆண்டு அளவில், சீனா கட்டியமைக்கும் விண்வெளி நிலையத்தில் ஒரு மைய அறையும், 2 ஆய்வு அறைகளும் இடம்பெறும் என்று கூறினார்.
மைய அறை 5 இணைப்பு பொருத்திக்களைக் கொண்டது. இதன் மூலம், சரக்கு ஏற்றியிறக்கல் விண்வெளி ஓடம், 2 மனிதர்களை ஏற்றிச்செல்லும் விண்கலங்கள், 2 ஆய்வு அறைகள் ஆகியவை இணைக்கப்படும். மேலும் விண்வெளிவீரர் அறையிலிருந்து வெளியே செல்லும் வெளிவழி ஒன்றும் உண்டு.