சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டுத் தேசிய கமிட்டியின் உறுப்பினரும், மனிதரை ஏற்றிச்செல்லும் விண்வெளிக் கலப் பயணத் திட்டப்பணியின் தலைமை வடிவமைப்பாளருமான சோஜியான்பீங் 8ஆம் நாள் சின்ஹுவா செய்தி நிறுவனத்தின் செய்தியாளருக்குப் பேட்டியளித்தார். அவர் கூறுகையில், 2020ஆம் ஆண்டு அளவில், சீனா கட்டியமைக்கும் விண்வெளி நிலையம், விண்வெளியில் சீனாவின் ஆய்வுக் கூடமாக இருக்கும் என்று கூறினார்.
முன்னேறிய அறிவியல் ஆய்வு, விண்வெளி தொழில் நுட்ப ஆராய்ச்சி, விண்வெளி வளத்தின் பயன்பாடு முதலியவற்றில் அறிவியலாளர்கள் ஈடுபடுவதற்கு விண்வெளி நிலையம் துணை புரியும். இதன் மூலம், முழ மனித குலம் முழுமைக்கும் நன்மை பயக்கும் என்றும் அவர் கூறினார்.