• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தனிச்சிறப்புமிக்க சீன வெளியுறவுப் பணிகளுக்கு பாராட்டுக் கருத்துக்கள்
  2016-03-09 15:22:14  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ 8ஆம் நாள் செவ்வாய்கிழமை செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில் சீனா தனிச்சிறப்பு உடைய வெளியுறவுப் பாதையை உருவாக்கி அதில் முன்னேறி வருகிறது என்று குறிப்பிட்டார். இது பற்றி வெளிநாட்டு நிபுணர்களும் அறிஞர்களும் பாராட்டுக்களை தெரிவித்ததோடு, சர்வதேச அரங்கில் சீனாவின் வெளியுறவுத் துறையின் செல்வாக்கு அதிகரித்து, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானம் நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சியை முன்னேற்றும் என்றும் கருத்து தெரிவித்தனர்.

கடந்த ஓராண்டில், சர்வதேச அரங்கில் சீனா பல்வேறு முக்கிய பங்களிப்பை ஆற்றியுள்ளது. எடுத்துக்காட்டாக, உலகின் வறுமை ஒழிப்புத் துறையில் சீனா மேலதிக பங்காற்றியுள்ளது. சிரியா பிரச்சினை, ஈரான் மற்றும் வடகொரிய அணு பிரச்சினை ஆகியவற்றில் சீனா ஆக்கமுள்ள இணக்க முயற்சிகளை எடுத்துள்ளது. அதன் மூலம், பிரதேச மற்றும் உலக அமைதிக்காக சீனா பாடுபட்டுள்ளது. புதிய விதமான சர்வதேச உறவின் உருவாக்கத்தைத் தூண்டும் அதேவேளையில், சீனா, சர்வதேச அரங்கில் அரசியல் செல்வாக்கை மேம்படுத்தி வருகிறது என்று மெக்சிகோ தேசிய தன்னாட்சிப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சீனா-மெக்சிகோ ஆய்வு மையத்தின் ஆய்வாளர் இகனசியோ மார்டினேஸ் கோர்டேஸ் தெரிவித்தார்.

ஒரு மிக சமமற்ற உலகத்தில், சமநிலையை பேணிக்காக்கும் ஆற்றலாக சீனா மாறுகிறது. இவ்வாண்டு நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் சீனாவின் பங்களிப்பு மேலும் தெளிவாகக் காணப்படும் என்று பிரான்ஸ் செனெட் அவையின் வெளியுறவுத்துறைக் குழுத் தலைவர் ஜான் பியேர் ராஃப்பரின் தெரிவித்தார்.

சீனாவின் தூதாண்மை குறித்து ரஷிய மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் யுரி டவ்ரோவ்ஸ்கி பேசுகையில்

சீனாவால் முன்னைக்கப்பட்ட 'கூட்டு கலந்தாய்வு, கூட்டு கட்டுமானம், கூட்டு பகிர்வு' என்ற கண்ணோட்டம், நியாயமான சர்வதேச உறவை உருவாக்க உதவும். இத்தகைய கண்ணோட்டத்தை நடைமுறைப்படுத்தி, சீனா முன்மாதிரியாக பதவியேற்று வருகிறது. நட்புறவு அண்டை வெளியுறவுக் கொள்கையை பின்பற்றும் சீனா, பிற நாடுகளுக்கு அடிப்படை வசதிக் கட்டுமான உதவி அளிக்கும்போது, நட்பார்ந்த ஒத்துழைப்புறவை நிலைநிறுத்தும். மேலும், பிரதேசப் பொருளாதார மற்றும் தொழில் நுடப் வளர்ச்சியை விரைவுப்படுத்தி, பிற நாடுகளின் தேர்வுக்கு சீனா மதிப்பு அளித்துள்ளது என்று தெரிவித்தார்.

கஜகஸ்தான் நாட்டின் சர்வதேச விவகார நிபுணர் வலிகான் துலிஷாவ் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை பற்றி பேசுகையில், சீனாவின் முன்மொழிவு, நெடுகிலுள்ள நாடுகளுக்கு வேலைவாய்ப்பு, முதலீடு, அடிப்டை வசதிக் கட்டுமானம், உள்ளிட்ட துறைகளில் பல வாய்ப்புகளை ஏற்படுத்தும். பல நாடுகள் இதில் இருந்து நன்மை பெறும் என்று தெரிவித்தார்.

ஒரு மண்டலம் மற்றும் ஒருப் பாதைக் கட்டுமானம், பிரதேசத்திற்கு அமைதி மற்றும் சமூக வளர்ச்சியை கொண்டு வரும். அது, பிரதேசத்தில் மோதல் ஏற்படும் சாத்தியத்தைக் குறைக்கவும் உதவும் என்று யுரி டவ்ரோவ்ஸ்கி தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040