புகை மூட்டப் பிரச்சினையைத் தீர்ப்பதில் மூன்று காலக் கட்டங்கள் உள்ளன. தற்போது, சீனாவின் தீர்வு 2-வது காலக் கட்டத்தில் இருக்கிறது. விரைவில், 3-வது காலக் கட்டத்தை நோக்கிச் செல்லும் என்று சீன சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறை அமைச்சர் சென் ஜிநிங் 11ஆம் நாள் சீனத் தேசிய மக்கள் பேரவைக் கூட்டத் தொடரின் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
பல கடுமையான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்திய பிறகு, சீனாவில் கடும் காற்று மாசுபாடுகள் குறைந்துள்ள. சிறந்த வானிலை காணப்படும் நாட்களின் எண்ணிக்கை, பி.எம் 2.5 முதலான குறியீட்டு எண்களில் மாற்றம் காணப்பட்டது. இதனால், புகை மூட்டப் பிரச்சினையை தீர்ப்பது 2-வது கட்டத்தில் இருக்கிறது. ஆனால், இக்கட்டத்தில், காற்று வேகம், மழைப் பொழிவு உள்ளிட்ட இயற்கை காரணிகள் இப்பணிப் பயனுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 3-வது காலக் கட்டத்துக்குப் பிறகு, இந்த இயற்கைக் காரணிகள் அதற்கு தாக்கம் ஏற்படுத்தாது. சுற்றுச்சூழல் மாசுப்பாட்டு பிரச்சினை தீர்க்கப்படும் என்று சென் ஜிநிங் கூறினார்.