• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை திட்டம்
  2016-03-11 16:26:53  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனத் தலைமையமைச்சர் லீ கெச்சியாங் 5ஆம் நாள் வழங்கிய அரசுப் பணியறிக்கையில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை ஆக்கப்பணியை பயன்தரும் முறையில் முன்னேற்ற வேண்டும் என்று தெரிவித்தார். அதோடு, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையை, அமைதி மற்றும் நட்புறவுக்கு சங்கிலித் தொடராகவும், கூட்டாக வளமடையும் பாதையாகவும் உருவாக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். அதே வேளையில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை தொலைநோக்கு திட்டம் குறித்து மேலை நாடுகள் ஐயங்களைக் கொண்டுள்ளன.

இத்தொலைநோக்கு திட்டத்தை சீனா முன்வைத்த பிறகு, சீனாவிலும் வெளிநாடுகளிலும் வேறுபட்ட குரல் எழும்பியுள்ளது. எடுத்துக்காட்டாக, இது சீனாவின் மார்ஷல் திட்டமாகும் என்ற கூற்று, இணையத் தளத்தில் வேண்டுமென்றே பரப்புரை செய்யப்பட்டு வருகிறது.

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற திட்டம், ஒத்துழைப்பு மூலம் கூட்டாக வெற்றி பெற வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. இத்திட்டம், பனிப்போர் காலத்தில் வகுக்கப்பட்ட மார்ஷல் திட்டத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது. இத்திட்டத்துக்கு எந்த இணைப்பு நிபந்தனையும் இல்லை. சீனா இத்திட்டத்தை முன்வைத்த பிறகு, இது குறித்து இதர நாடுகளுடன் இணைந்து விவாதித்துள்ளது. ஆனால், மார்ஷல் திட்டத்தில் இணைய குறிப்பிட்ட நிபந்தனைகள் உண்டு.

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை திட்டத்தைப் பயன்படுத்தி, ஏற்கனவேயுள்ள வட்டாரம் ஏன் உலகப் பொருளாதார அமைப்பு முறைக்கு அறைகூவல் விடுத்து, இதர நாடுகளின் நலன்களை விலக்கிக் கொள்ளும் என்று சில நாடுகள் கவலைபடுகின்றன. இந்நாடுகளின் கவலையை சீனா புரிந்து கொள்கிறது. ஆனால், முன்னதாக சீனா இத்தகைய செயலில் ஈடுபட்டதில்லை. அதோடு, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை ஆக்கப்பணியின் உதவியுடன், மேலும் சீராக வளர்ச்சியடையும் என்று சீனா உண்மையில் எதிர்பார்க்கின்றது. ஆனால் சீனாவின் வளர்ச்சி, அண்டை நாடுகளின் வளர்ச்சியைப் பாதிக்காது.

உள்ளூர் வளத்தை சூறையாடுவதன் மூலம் சீனா பொருளாதாரக் கட்டுப்பாட்டை வலுப்படுத்தும் என்று சில வளரும் நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. ஆனால், இத்திட்டத்தின் நடைமுறையாக்கம், பொருளாதாரம், அரசியல் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் அதிக அபாயத்தைச் சந்திக்கும் என்று சீனா கவலைப்படுகின்றது. இத்திட்டம், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரதேசத்தில் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்காகும். 60க்கும் மேலான நாடுகள் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் நடைமுறையாக்கம் இன்னல்கள் மிக்கவை. ஆனால், வளர்ச்சி போக்கில் இந்த இன்னல்களைத் தீர்க்க முடியும். அண்டை நாடுகள் வளர்ச்சியடைந்தால், சீனாவின் வளர்ச்சி மேலும் நிதானமாக இருக்கும் என்பது, கடந்த சில ஆண்டுகளில் சீனா பெற்றுள்ள அனுபவமாகும்.

பொருளாதாரத்தை வளர்க்கும் வகையில், சீனாவுக்கும், மத்திய ஆசியா, தென் கிழக்கு ஆசியா உள்ளிட்ட ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் நெடுகிலுள்ள நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்குமிடையே ஒன்றுக்கொன்று திறந்து வைக்கப்படும். இதன் அடிப்படையில் நிலைமையை வலுப்படுத்தி, விரிவாக்குவது, ஒன்றுக்கொன்று நன்மை பயக்கும் ஒத்துழைப்பு மேற்கொள்வதன் மூலம், நியாயமான, ஒருமைபாடான சந்தை போட்டி சூழலை உருவாக்குவது, பல்வகை வளங்களின் தாராள புழக்கத்தை விரைவுபடுத்துவது, பல்வேறு நாட்டு மக்களுக்கு நன்மை பயப்து, ஆகியவை இத்திட்டத்தின் மைய நோக்கமாகும்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040