தற்போது, சீனாவின் முக்கியக் கூட்டத் தொடர்கள் தொடங்கியுள்ளன. அந்நிலையில், கூட்டத் தொடரில் 13-வது ஐந்தாண்டுத் திட்டம், காற்று மாசுபாடு, ஓரளவு வசதி படைத்த சமூகத்தை உருவாக்குதல் மற்றும் பொருளாதார வளர்ச்சி போன்ற அம்சங்கள் அனைவரின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. அந்நிலையில், மருத்துவத் துறையிலான சீர்திருத்தம் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என விரும்புகின்றேன். சிறந்த மருத்துவத்தை உத்திரவாதம் செய்ய அத்துறையில் போட்டியாற்றலை வலுப்படுத்துவடன், மருத்துவர்களிடம் நேர்மையான அணுகுமுறையை மேம்படுத்த வேண்டும். கிராமப்புறங்களில், மருத்துவர்களுக்காக நோயாளிகள் காத்திருக்கும் நிலைமையை தவிர்க்க வேண்டும். சில குடும்பங்கள் வறுமையில் வீழும் அளவிற்கு அதிகமாக இருக்கும் மருத்துவச் செலவைக் குறைக்க முயற்சிக்க வேண்டும். மருந்துகள் அதிக அளவில் விற்பனையாக வேண்டும் என்ற நோக்கில் மருந்து நிறுவனங்களுக்கும், மருத்துவர்களுக்கும் இடையிலான தொடர்பைக் கண்டறிந்து அதைத் துண்டிக்க வேண்டும். இதுபோன்ற குறைபாடுகளைக் களைந்து, மருத்துவத் துறையில் சீர்திருத்த நடவடிக்கைகளை நடப்புக் கூட்டத் தொடர் தீர்மானிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.