சீனாவின் வங்கித் துறை சீராக உள்ளது
2016-03-12 19:15:24 cri எழுத்தின் அளவு: A A A
சீனாவின் வங்கித் துறை சீராக இயங்குகின்றது. இடர்ப்பாடு ஏற்படாலும் அதனைக் கட்டுப்படுத்த முடியும் என்று சீன வங்கி ஒழுங்குமுறை ஆணையத்தின் இயக்குநர் சாங் ஃபூலின் கூறியுள்ளார். 12ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவை 4ஆவது கூட்டத் தொடர் 12ஆம் நாள் பெய்ஜிங்கில் செய்தியாளர் கூட்டத்தை நடத்தியது. சில சர்வதேச மதிப்பீட்டு நிறுவனங்கள் சீனாவில் சில நாணய நிறுவனங்களின் மீதான எதிர்கால மதிப்பீட்டைக் குறைத்துள்ளன. இது குறித்து பேசிய அவர், சீன வங்கித் துறையை இந்த மதிப்பீட்டு நிறுவனங்கள் தவறாக மதிப்பிட்டுள்ளன என்று சுட்டிக்காட்டினார். நாணய நிறைவு விகிதாசாரம், வாராக்கடன் விகிதாசாரம் முதலிய நிலைமையைப் பார்த்தால், தற்போது சீனாவின் வணிக வங்கிகளின் சராசரி நிலைமை, சில வளர்ந்த நாடுகளில் இருப்பதை விட சீராக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய