சீனாவில் புதிய எரியாற்றல் வாகனத் துறை வேகமாக வளர்ந்து வருகின்றது என்று சீனத் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மியாவ் வேய் 13ஆம் நாள் பெய்ஜிங்கில் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு சீனாவில் புதிய எரியாற்றல் வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனை அளவு 3 இலட்சத்துக்கு அதிகமாகும். இவ்வாண்டு இந்த அளவு மேலும் ஒரு மடங்கு அதிகரிக்கும் என்றும், சீன அரசு புதிய எரியாற்றல் வாகனத் துறையின் வளர்ச்சிக்குத் தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.