12ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 4ஆவது கூட்டத் தொடர் 13ஆம் நாள் முற்பகல் 3ஆவது முழு அமர்வை நடத்தியது. உச்ச நிலை மக்கள் நீதி மன்றத்தின் தலைவர் (தலைமை நீதிபதி) சோ ச்சியாங் வழங்கிய பணியறிக்கையும், உச்ச நிலை மக்கள் அரசு வழக்கறிஞர் மன்றத்தின் இயக்குநர்(தலைமை வழக்கறிஞர்) சாவ் ஜியன்மிங் வழங்கிய பணியறிக்கையும் இம்முழு அமர்வில் கேட்டறியப்பட்டன.