ஷீ ச்சின்பிங்:புத்தாக்கம் மூலம் சீனப் படையின் ஆக்கப்பணியை முன்னேற்ற வேண்டும்
2016-03-14 09:23:15 cri எழுத்தின் அளவு: A A A
சீன அரசுத் தலைவர் ஷீ ச்சின்பீங் 13ஆம் நாள் 12ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 4ஆவது கூட்டத்தொடரில் சீன மக்கள் விடுதலை படைப் பிரதிநிதிக்குழுவின் முழு அமர்வில் பங்கெடுத்தார். இதில் அவர் பேசுகையில், புத்தாக்கத்தைச் சீனாவின் படை ஆக்கப்பணியின் வளர்ச்சியில் முக்கிய இடத்தில் வைக்க வேண்டும் என்று தெரிவித்தார். அதோடு, சீர்திருத்தம் மற்றும் புத்தாக்கம் மூலம், தேசியப் பாதுகாப்பு மற்றும் படை ஆக்கப்பணியின் புதிய பாய்ச்சல் வளர்ச்சியைத் தூண்டி, புத்தாக்கம் மூலம் வளர்ச்சியை முன்னேற்றும் தொலைநோக்கு திட்டத்தைப் பன்முகங்களிலும் நடைமுறைப்படுத்தி, படையின் வலிமையையும், வளர்ச்சியையும் தூண்டும் புதிய நிலைமையைத் துவக்கி வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய