சீன உச்ச மக்கள் நீதி மன்றத் தலைவர் சோ ஜியாங், சீன உச்ச மக்கள் வழக்கறிஞர் மன்றத் தலைவர் ட்சாவ் ஜியென் மிங் ஆகியோர் மார்ச் 13-ஆம் நாள் 12ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 4ஆவது கூட்டத்தொடரில் தனித்தினயாக பணியறிக்கைகளை வழங்கினர்.
சீனாவின் உச்ச நீதி சட்ட நிறுவனங்களான சீன உச்ச மக்கள் நீதி மன்றமும் சீன உச்ச மக்கள் வழக்கறிஞர் மன்றமும், 2015-ஆம் ஆண்டில் ஊழல் ஒழிப்புப் பணியில் பெற்றுள்ள சாதனைகள் இப்பணியறிக்கைகளில் வெளியிடப்பட்டன. அத்துடன், 2016-ஆம் ஆண்டில் ஊழல் ஒழிப்புப் பணியை ஆழமான முறையில் மேற்கொள்வதோடு, பயனுள்ள அமைப்புமுறையின் உருவாக்கத்தை முன்னேற்றும் என்று இப்பணியறிக்கைகளில் கூறப்பட்டுள்ளது.
இவ்வாண்டு, ஊழல் ஒழிப்புப் பணி, நாட்டின் சீர்திருத்த வளர்ச்சிக்கும் மக்களின் வாழ்க்கைக்கும் அதிகமான உத்தரவாதம் அளிக்கும் என்று இரு கூட்டத்தொடர்களின் சில பிரதிநிதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.