• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வறுமை ஒழிப்புப் பணி பற்றி சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டு தேசிய கமிட்டி உறுப்பினர்கள் வழங்கிய முன்மொழிவுகள்
  2016-03-14 19:19:23  cri எழுத்தின் அளவு:  A A A   

2020ஆம் ஆண்டு சீரான வாழ்க்கை வசதி படைத்த நாடாக சீனா மாற வேண்டும் என்றும், தற்போதைய வரையறையின்படி நாட்டின் முழுவதிலுமுள்ள 7 கோடி வறிய மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட வேண்டும் என்றும் சீனாவின் 13ஆவது ஐந்தாண்டு திட்ட வரைவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வறுமை ஒழிப்புப் பணி பற்றி சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டு தேசிய கமிட்டி உறுப்பினர்கள் ஆக்கப்பூர்வமாக விவாதித்து அதிக முன்மொழிவுகளை முன்வைத்துள்ளனர்.

சீன அறிவியல் சங்கத்தின் துணைத் தலைவர் சென் சாங்லியாங் அவர்களில் ஒருவர். அவர் கூறியதாவது

7 கோடி என்பது மிக அதிகமாகும். 2020க்குள் அவர்களில் இன்னும் ஒரு பகுதி மக்கள் வறுமையிலிருந்து மீட்க முடிவில்லை என்றால் எங்கள் பணிப் பொறுப்பை சீராக ஏற்று மேற்கொள்ளவில்லை என்று சொல்லலாம் என்றார் அவர்.

சீனத் தேசிய சுற்றுலாப் பணியகத்தின் முன்னாள் தலைவர் சாவ் ச்சி வேய் உள்ளிட்ட சில உறுப்பினர்கள் சேர்ந்து சுற்றுலாத் தொழிலின் மூலம் வறுமையை ஒழிப்பது தொடர்பாக கருத்துரு ஒன்றை முன்வைத்தனர். வறுமையை ஒழிக்க சுற்றுலாத் தொழிலை வளர்ப்பதற்கு அதிக நிதி ஒதுக்கீடு தேவையில்லை. ஆனால், அதிக வேலை வாய்ப்புகளை வழங்கி, விரைவில் பயன் பெற முடியும். கிராமப்புறங்களில் அதிக பெண்மணிகள் சுற்றுலா துறையில் பங்கெடுக்கலாம். நாடு முழுவதிலும் சுற்றுலாத் தொழிலில் ஈடுபடும் சுமார் ஒரு கோடியே 20 இலட்சம் மக்கள் 2020ஆம் ஆண்டு,வறுமையிலிருந்து விலக முடியும். இவ்வெண்ணிக்கை மொத்த வறிய மக்கள் தொகையில் சுமார் 17 விழுக்காடு வகிக்கின்றது என்று அவர் கூறினார்.

வறிய மக்களில் மாற்றுத் திறனுடையோரின் எண்ணிக்கை அதிகம். புள்ளிவிபரங்களின்படி, கிராமப்புறங்களில் சுமார் 9 இலட்சம் வறிய மாற்றுத் திறனாளிகளுக்குச் சொந்த வீடு இல்லை. அது மட்டுமல்லாமல், கல்வி வசதி குறைவு என்பது அவர்கள் வறிய நிலைமையில் இருப்பதற்கான காரணங்களில் முக்கிய ஒன்றாகும். வீடு, மருத்துவ சிகிச்சை, கல்வி ஆகியவற்றில் அரசு மாற்றுத் திறனுடையோருக்கு மேலதிக முன்னுரிமை வழங்க வேண்டும் என்று உறுப்பினர் போ சாவ் யே கருத்து தெரிவித்தார்.

வறுமை ஒழிப்புப் பணிக்கான மத்திய அரசின் கொள்கைகள், விபரமான நடைமுறை செயல்பாடுகள் முதலியவை தொடர்பாக இவ்வாண்டு நடைபெற்ற சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் ஆண்டுக் கூட்டத் தொடரில் உறுப்பினர்கள் அதிக முன்மொழிவுகளை வழங்கியுள்ளனர். இப்பணிக்கான மனவுறுதியையும் நம்பிக்கையையும் இது காட்டுகின்றது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040