இவ்வாண்டு ஜனவரி திங்கள், தற்போதும், அடுத்த நீண்டகாலக்கட்டத்திலும், யாங் சீ ஆற்றுப் பிரதேசத்தின் உயிரின வாழ்க்கை சூழலின் மேம்பாட்டை முன்னுரிமையுடன் விரைவுபடுத்த வேண்டும். யாங் சீ ஆற்றுப் பிரதேசத்தில் பெரிய ரக வளர்ச்சி திட்டப்பணியை மேற்கொள்ளக் கூடாது என்னும் கருத்தை ஷீ ச்சின்பிங் முன்வைத்தார். இது குறித்து, சீனத் தேசிய மக்கள் பேரவைப் பிரதிநிதியும், ச்சியாங் சூ மாநிலத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அலுவலகத்தின் தலைவருமான சேன் மங் மங் பேசுகையில், ச்சியாங் சூ மாநிலத்தில் பொது மக்களின் வாழ்க்கைக்கு பயன்படும் நீரில் 80 விழுக்காட்டுப் பகுதி யாங் சீ ஆற்றிலிருந்தே பெறப்படுகிறது. இதனால் ச்சியாங் சு மாநிலம், யாங் சீ ஆற்றின் உயிரின வாழ்க்கை சூழல் பாதுகாப்பில் பெரும் கவனம் செலுத்தி வருகிறது என்று தெரிவித்தார். 12ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தில், திட்டமிட்ட இலக்குகளை ச்சியாங் சு மாநிலம் எட்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். அவர் கூறியதாவது:
"ச்சியாங் சூ மாநிலத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு வாரியம், யாங் சீ ஆற்றுப் பொருளாதார மண்டலத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டத்தை வகுக்கும். இதை 13ஆவது ஐந்தாண்டு திட்டத்துடன் கண்டிப்பான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும். யாங் சீ ஆற்று பொருளாதார மண்டலத்தின் ஆக்கப்பணியில், உயிரின வாழ்க்கை சூழல் ஆக்கப்பணி மற்றும் மேம்பாட்டை முக்கிய இடத்தில் வைத்து, இவற்றை யாங் சீ ஆற்று பிரதேசத்தின் தொழில் மேம்பாட்டுடன் நடைமுறைப்படுத்த வேண்டும்" என்றார் அவர்.
சீனத் தேசிய மக்கள் பேரவைப் பிரதிநிதியும், ச்சியாங் சூ மாநிலத்தின் சூ சோ நகராட்சி தலைவருமான ச்சூ ஃபு தியன் கூறியதாவது:
"சூ சோ நகரில் நீர்ப்பரப்பு அதிகம். தெய் ஹூ ஏரி மற்றும் யாங் சேங் ஹூ ஏரியைத் தவிர, பெரிய மற்றும் சிறிய அளவிலான ஏரிகள் அதிகம். சூ சோ நகரின் நீர் வளத்தைப் பாதுகாத்து, நீர் தர வரையறையை நாட்டின் வரையறைக்கு எட்டச் செய்ய சட்டமியற்றல் மிகவும் முக்கியமானது. சட்டமியற்றல் உரிமையின் பயன்பாட்டில் ச்சூ சோ நகர் பெரும் கவனம் செலுத்தியுள்ளது" என்றார் அவர்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற நிலைமையில், பசுமையான வளர்ச்சியை ச்சியாங் சூ மேலும் விரைவுபடுத்துவது குறித்து சேன் மங் மங் கூறியதாவது:
"ஒரு புறம், பின்தங்கிய உற்பத்தி திறனை அகற்ற வேண்டும். மறு புறம், தொழில் நுட்ப மேம்பாட்டில் ஈடுபட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொழில் நுட்பத்தைப் பரவல் செய்வதில் தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும்" என்றார் அவர்.