தற்போது, உலகில் பிரதேசங்களின் ஒத்துழைப்பு, வளர்ச்சி ஓட்டமாக மாறியுள்ளது. ஆனால், பண்பாட்டு பன்மைத்தன்மையையும், வளர்ச்சி வேறுபாட்டையும் இம்முன்னேற்றப் போக்கு எதிர்நோக்கியுள்ளது. அதே வேளையில், செய்தி ஊடகங்களின் ஒற்றுமையான காலத்தில், திறப்பு, கூட்டாக அனுபவிப்பது ஆகியவை செய்தி ஊடகங்களின் முக்கிய பகுதியாக மாறியுள்ளது. இப்பின்னணியில், பல்வேறு நாடுகளின் செய்தி ஊடகங்களின் கூட்டு புதிய பிரச்சினையை எதிர்கொண்டுள்ளன. அதாவது, திறப்பு மற்றும் பொறுமையுடன் பரஸ்பர தொடர்பு மூலம், செய்தி ஊடகங்களின் சீர்திருத்தத்தை முன்னேற்றி, ஒத்துழைப்புடன் கூடிய வெற்றியை நனவாக்க வேண்டும்.
போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2016ஆம் ஆண்டு கூட்டத்தின் கிளை கருத்தரங்கான ஊடகத் துறைத் தலைவர்களின் வட்டமேசைக் கூட்டம், உலகிலுள்ள 20க்கும் மேற்பட்ட செய்தி ஊடகங்களின் தலைவர்களுக்கு போ ஆவ் ஒன்று திரளுமாறு அழைப்பு விடுக்கும். செய்தி ஊடகங்களின் ஒன்றுமை மற்றும் பரஸ்பரத் தொடர்பு குறித்து, கூட்டாக விவாதித்து, ஒத்துழைப்பின் புதிய எதிர்காலத்தை இது கூட்டாக உருவாக்கும்.