போஆவ் ஆண்டு மன்றக் கூட்டம் :
ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை திட்டம் தொடர்பாக கடந்த போஆவ் கருத்தரங்குக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் செயலுக்கு வரத் தொடங்கியுள்ளன. அதில், ஆசிய அடிப்படை வசதிக்கான வங்கி மிக முக்கியமான தொடக்கமாகும். அது, சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. ஆலோசனைகளைத் தொடர்ந்து, இதுபோன்று மேலும் பல திட்டங்கள் இந்த ஆண்டு நடைமுறைக்கு வரும் என்று நம்புகின்றேன். தெற்கு ஆசியா மற்றும் இரோசியாவில் துணை வலையமைவை ஏற்படுத்துவது முக்கியமாகக் கவனத்தில் கொள்ளப்படும். பிரதிநிதிகளின் யோசனைகள், எதிர்நோக்கப்பட்டுள்ள திட்டங்களின் செயல்பாட்டுக்கு பயன்படுத்தப்படும்.
ஊடகவியலாளர்களுக்கான வட்ட மேசை மாநாடு :
தற்போது பாரம்பரிய செய்தி ஊடகங்கள் எதிர்கொள்ளும் சவால்களை எப்படி சமாளிப்பது என ஊடகவியலாளர்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்க்கிறேன். இணைய ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் அளிக்கும் பயன்கள் குறித்தும், பாதிப்புகள் குறித்தும் ஆராய்ந்து, செயல்முறை நடவடிக்கைகளை எழுப்புவது முக்கியத் தேவை.
ஆசிய ஊடக ஒத்துழைப்பு அமைப்புக்கான முதல்விதை விதைக்கப்படும் என நம்புகிறேன். ஊடகவியலாளர்கள் ஒண்றினைந்து திட்டமிட்டு உரிய நேரத்தில் உறுதியான நடவடிக்கை எடுப்பதற்கான சரியான தருணம் இதுவாகும். மூத்த ஊடகவியலாளர்களின் குழுவை அமைத்து திட்டங்களை வகுக்க வேண்டும். பின்னர், அது தொடர்பான ஆய்வை சிறப்பு நிபுணர்கள் மேற்கொள்ள வேண்டும். பிரதேச அளவில் பல்வேறு இளம் பத்திரிகையாளர்களுக்கான பயிற்சி மையங்கள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பத்திரிகையாளர்களுக்கு இடையேயான கருத்து பரிமாற்றத்தை வலுப்படுத்துவதும் முக்கியமானது.