போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2016ஆம் ஆண்டு கூட்டம் சீனாவின் ஹைநான் மாநிலத்தில் துவங்கியுள்ளது. செய்தி ஊடகத் தலைவர்களின் வட்ட மேசைக் கூட்டம் 22ஆம் நாள் நடைபெற்றது. இதில், போ ஆவ் ஆசிய மன்றம், சீனப் பொது வெளியுறவு சங்கம் ஆகியவையும், சீனா, துருக்கி, கம்போடியா, நேபாளம் உள்ளிட்ட 13 நாடுகளைச் சேர்ந்த செய்தி ஊடகங்களும் ஆசிய செய்தி ஊடக ஒத்துழைப்பு அமைப்பை உருவாக்கின என்பது குறிப்பிடத்தக்கது.