• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நா பயிற்சி பற்றிய போட்டி(மேலும் படிக்க)
  2016-04-01 14:12:44  cri எழுத்தின் அளவு:  A A A   
வணக்கம் நேயர்களே. நா பயிற்சி பற்றிய போட்டிக்கு உங்களை வரவேற்கோம். சீன வானொலி தமிழ்ப் பிரிவு தா சுய் வகுப்பு என்ற காணொலி நிகழ்ச்சியின் புதிய தொகுதி வெளியிட்டுள்ளது. இவ்வகுப்பில், தா ட்சுய்யும், தா தோவும், நா பயிற்சி என்ற வழிமுறையின் மூலம், நேயர்களுக்குச் சீன மொழியைக் கற்றுக் கொடுத்தனர். தவிரவும், அதன் மூலம் சீன மொழி தொடர்பான 4 நா பயிற்சி காணொலி மாதிரிகளையும் நீங்கள் கற்றுக்கொள்ளலாம். இக்காணொலிகளில் நிலானி, மதியழகன், மோகன், கலைமணி, சக்திவேல், நாதன், மணிகண்டன் ஆகியோர், சீன மொழி மற்றும் தமிழ் மொழியின் மூலம், நா பயிற்சி மாதிரிகளை வாசித்தனர். நீங்கள் இணையதளப் பக்கத்தில் இத்தொகுதியைக் கண்டு ரசிக்கலாம்.

இப்போட்டியின் மீது, ஆர்வம் கொண்ட நேயர்கள், சீன மொழி தொடர்பான நா பயிற்சிகளைக் கற்றுக்கொண்டு, வாசித்து பதிவு செய்த சீன மொழி தொடர்பான நா பயிற்சி ஒலிக்கோப்பினை மின்னஞ்சல் மூலம் எங்களுக்கு அனுப்புங்கள். அத்துடன், உங்களின் நிழற்படம் ஒன்றையும் அனுப்புங்கள். நேயர்கள் அனுப்பிய நா பயிற்சி ஒலிகளிலிருந்து சிறந்த பதிவுகளை தேர்ந்தெடுத்து, அவரது படத்தோடு நமது இணையத்தளத்தில் வெளியிடுவோம். இந்த பதிவுகளிலிருந்து பரிசு பெற்றவர்களை தேர்ந்தெடுப்போம். இப்போட்டி ஏப்ரல் முதல் நாள் துவங்கும். ஏப்ரல் 20ஆம் நாளுக்குள் நேயர்கள் ஒலிக்கோப்பினையும் நிழற்படத்தையும் அனுப்ப வேண்டும். அதற்குப் பிறகு அனுப்பும் நேயர்கள் பரிசு பெற முடியாது. மே திங்கள் முதல் நாள் பரிசு பெற்றவரின் பெயர்ப் பட்டியலை வெளியிடுவோம்.

ஒரு முதல் பரிசு, 5 2ஆவது பரிசு, 10 3ஆவது பரிசு ஆகியவற்றை வழங்க ஏற்பாடு செய்துள்ளோம். நேயர்களின் பங்கேற்புக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம். போட்டியில் பங்கெடுங்கள். பரிசுகளை வெல்லுங்கள்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040