• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தென் சீனக் கடல் பற்றிய வரலாற்றுப் பதிவுகள்-2
  2016-04-13 15:25:43  cri எழுத்தின் அளவு:  A A A   

பிலிப்பைன்ஸ் உரிமை பிரதேசத்தின் அளவு, பல சர்வதேச ஒப்பந்தங்களால் வகுக்கப்பட்டது. 1898ஆம் ஆண்டின் அமெரிக்க-ஸ்பெயின் பாரிஸ் அமைதி ஒப்பந்தம், 1900ஆம் ஆண்டின் அமெரிக்காவும் ஸ்பெயினும் பிலிப்பைன்ஸுக்கு வெளியேயான தீவுகளின் ஒப்படைப்பு பற்றிய ஒப்பந்தம், 1930ஆம் ஆண்டின் பிரிட்டனைச் சேர்ந்த வடக்கு பொர்னொவுக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த பிலிப்பைன்ஸுக்கும் இடையேயான எல்லையை வகுக்கும் ஒப்பந்தம் ஆகியவற்றில் பிலிப்பைன்ஸின் உரிமை பிரதேசம் தொடர்பான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அந்த ஒப்பந்தங்களின்படி, சீனாவின் நான்ஷா தீவுகளும் ஹுவாங்யன் தீவும் பிலிப்பைன்ஸின் உரிமை பிரதேசங்களில் அடங்கவில்லை.


சர்வதேச சட்டப்படி, ஒரு இடத்தை கைபற்றிய செயல் பயனுள்ளதா என்பதை மதிப்பிட, இச்செயல், இறையாண்மை தன்மை வாய்ந்த்தாக இல்லையா என்பதுவே குறிப்பிட்ட வரையறையாகும். இச்செயலை மேற்கொண்டவர்களின் விருப்பம் இயற்கையானதா என்பது தான் மிக முக்கியது. பிலிப்பைன்ஸ் 1946ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. ஸ்பேயின் மற்றும் அமெரிக்கா அதனை காலனி எடுத்து ஆட்சி புரிந்திருந்தன. இந்த 2 காலனி நாடுகள், ஹுவாங்யன் தீவின் இறையாண்மையை பெற முன்வைக்கவில்லை.


தவிர, கெய்ரோ அறிக்கை மற்றும் போட்தாம் கூட்டறிக்கையின்படி, சீனா ஜப்பானிலிருந்து தென் சீன கடல் தீவுகளை மீண்டும் பெற்றுள்ளது. இத்தீவுகள் மீதான இறையாண்மை மீண்டும் சீனாவுக்குரியது. எனவே, பிலிப்பைன்ஸின் செயல் சீனாவின் இறையாண்மையை மீறியுள்ளது. அந்நாட்டின் செயல் சர்வதேச சட்டத்துக்கு உட்பட்டது அல்ல.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040