உண்மையிலே, 2ஆவது உலகப் போருக்கு பிந்தைய ஒரு நீண்டகாலத்தில், தென் சீனக் கடல் மீதான சீனாவின் அரசுரிமைக்கும் தொடர்புடைய உரிமை நலன்களுக்கும் பன்னாட்டுச் சமூகத்தின் பொது ஒப்புதல் கிடைத்தது. அமெரிக்கா வெளியிட்ட அதிகாரப்பூர்வ நிலப்படம் மற்றும் புத்தகங்களில், எடுத்துக்காட்டாக 1961ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட லிபின்காட்ஸ் கெஜட்டீர் ஆப் த வோல்ட்(LIPPINCOTT'S GAZETTEER OF THE WORLD), 1971ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட உலக நாடுகளின் நிர்வாகப் பிரிவு களஞ்சியம் உள்ளிட்டவற்றில், தென் சீனக் கடலிலுள்ள பல்வேறு தீவுகள் மீதான சீனாவின் அரசுரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 1952ஆம் ஆண்டு ஜப்பான் வெளியிட்ட வரையறையான உலக நிலப்படத் தொகுதியிலும், 1972ஆம் ஆண்டில் வெளியிட்ட உலக ஆண்டு நூலிலும் சீனாவின் இந்த அரசுரிமை ஏற்றுக்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.