2000 ஆண்டுகளுக்கு முன் சீன மக்கள் இப்பகுதியில் வாழ்ந்து செயல்பட்டு வந்த்தற்கான பதிவுகள் உள்ளன. தென் சீனக் கடல் பரப்பில் சீன மக்கள் தான் இந்த தீவுகளைக் கண்டறிந்து, அவற்றுக்கு பெயர்களை சூட்டினர். மிகவும் முன்னதாகவே இத்தீவுகளின் இறையாண்மைக்கு உரிமையாளர்கள் சீன மக்களாவர்.
குழுமி இருக்கும் இந்தத் தீவுகள் ஒரு கூட்டம் தான். ஆனால், பிலிப்பைன்ஸ் சொந்த நலனை நாடும் வகையில், இந்த நியாயமான உறவைப் பொருட்படுத்தாமல் அவற்றை தனித்தனி தீவுகளாக பிரித்து கையாண்டு வருகின்றது.
கடல் சட்டம் பற்றிய ஐ.நாவின் ஒப்பந்தத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம் மற்றும் கண்டத் திட்டு தொடர்பான விதிகள் இடம்பெறுகின்றன. அவற்றின்படி, கடலோர நாடுகள் சொந்த நலன்களைப் பேணிக்காக்கும் வளர்ச்சி உரிமையைக் கொண்டுள்ளன. குறிப்பிட்ட கடற்பரப்பு தொடர்பாக மேற்கொண்ட ஆய்வு தொடர்புடைய நாடுகளின் இறையாண்மையைப் பாதிக்கக் கூடாது.