20ஆம் நூற்றண்டின் 30 ஆண்டுகளில் தென் சீனக் கடல் பரப்பிலுள்ள தீவுகள் மீது பிலிப்பைன்ஸ் ஆர்வம் காட்டத் தொடங்கியது. சட்டத்துக்குப் புறம்பான இறையாண்மை கோரிக்கைகளை அந்நாடு பல முறை வெளியிட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்த சூழ்ச்சி மேலும் தெளிவாக மாறியுள்ளது.
எடுத்துக்காட்டாக 1956ஆம் ஆண்டு மார்ச் திங்கள், பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா கடல் பயண கல்லூரியின் வேந்தர் கிரோமா ஒரு தனிநபர் ஆய்வு அணியை ஏற்பாடு செய்து, தென் சீனக் கடல் பரப்பிலுள்ள தீவுகளில் பயணம் மேற்கொண்டார். நடைமுறை உண்மையை அவர் புறக்கணித்து, இந்தத் தீவுகள் யாருக்கும் உரிமை இல்லை என்று கூறி, அவற்றை பிலிப்பன்ஸில் சேர்க்கலாம் என்று விண்ணப்பித்தார்.
சீன அரசு இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆகவே, கிரோமாவின் விண்ணப்பம் பிலிப்பைன்ஸ் அரசுடன் தொடர்பு இல்லை என்றும், தென் சீனக் கடல் பரப்பிலுள்ள தீவுகளின் மீது பிலிப்பன்ஸ் இறையாண்மை கோரிக்கை விடுக்காது என்றும் அப்போதைய பிலிப்பைன்ஸ் அரசு விளக்கம் அளித்தது.
20ஆம் நூற்றாண்டின் 70ஆம் ஆண்டுகளில், சீனாவின் அரசியல் துறையில் கொந்தளிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், பிலிப்பைன்ஸ் 1970,1971,1978,1980 ஆகிய ஆண்டுகளில், தென் சீன கடல் பரப்பிலுள்ள மாஹுவான் தீவு, ஃபேசின் தீவு, நான்யாவ் தீவு உள்ளிட்ட 8 தீவுகளை சட்ட விரோதமாக கைபற்றியது. இது மட்டுமல்லாமல், பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவர் விரைவாக உத்தரவை பிறப்பித்து அரசியல் அமைப்புமுறை சட்டத்தையும் திருத்தி, மேற்கூறிய தீவுகளின் மீதான அரசுரிமையை வெளிப்படையாகவே அறிவித்தது.