ரோபோ எனும் இயந்திர சாதனத்தின் வரவு, மனித குலத்துக்கு பெரும் நல்வினையாக அமைந்தது. பல்வேறு கடினமான பணிகளை எளிமையப் படுத்தியுள்ள ரோபோ தற்போது, பிசாவை விநியோகம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் டொமினோ என்ற பெயர் கொண்ட பீசா நிறுவனம் ரோபோவா களத்தில் இறக்கியுள்ளது.
3 அடி உயரம், 204 கிலோ எடை கொண்ட இந்த ரோபோ, 20 கிலோ மீட்டர் தூரம் வரை தானாகவே சென்று பீசாவை நுகர்வோர்களுக்கு விநியோகிக்கும் பணியை புரிந்து வருகிறது.
இதனைப் பார்ப்பதற்கு சிறுவர்களுக்கான நான்கு சக்கர வாகனத்தைப்போல உள்ளது. இதில். சுமார் 10 பீசாக்களை வைக்க முடியும். பீசாக்களை வெதுவெதுப்பாகவே விநியோகம் செய்யும் வகையில் இந்த எந்திரத்தில் மின்கலன் பொருத்தப்பட்டுள்ளது. விநியோகம் செய்ய வேண்டிய இடத்தை கண்டுபிடிக்கும் வகையில் லிடார் லேசர்-லைட் சென்சார் இணைக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் பீசாவைப் பெறும் நபர்களுக்கு முன்னரே, ஒரு பாதுகாப்பு எண் வழங்கப்படுகிறது. இந்த ரோபோ அந்த நபரை அடைந்தவுடன், இந்த எந்திரத்தில் அந்த எண்ணை பதிவு செய்தால்போதும் சூடான பீசா இருந்த இடத்தில் இருந்தே பெற முடியும்.
இந்த ரோபா சாலையிலும், நடைபாதையிலும் செல்லும் வகையிலானது. அனைத்து பீசாக்களையும் விநியோகம் செய்து விட்டால் மீண்டும் கடைக்குத் திரும்பி அடுத்த சுற்றுப்பயணியைத் தொடரும்.
இது தொடர்பாக டொமினோ குழுமத்தின் தலைமை செயல் இயக்குநர் டான் மெஜி கூறுகையில், இந்த மனிதன் ஒருநாள் எங்களது குடும்பத்தில் முழுமையாக இணைவான். எதிர்காலத்தை வடிவமைக்கும் பொருளாக இவன் விளங்குகிறான். இன்னும் பல புதுமைகளைக் கண்டறிய நாங்கள் ஆவலுடன் உள்ளோம் என்று தெரிவித்தார்.
ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் ஓட்டுநர் இல்லாமல் வாகனம் செல்வதற்கு அனுமதி கிடையாது. அதனால் டொமினோ குழுமம், தற்போது அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. விரைவில் பீசாவை விநியோகிக்கும் ரோபாவின் அதிகார்ப்பூர்வ தேதி வெளியிடப்பட உள்ளது.
தற்போது, ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லான்ட் நகரில் இந்த ரோபா சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.