• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் வெளிநாட்டு வர்த்தக நிலைமை
  2016-05-09 16:37:50  cri எழுத்தின் அளவு:  A A A   
இவ்வாண்டின் முதல் 4 திங்களில் சீன ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மொத்த மதிப்பு, 7 இலட்சத்து 17 ஆயிரம் கோடி யுவானாகும். கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 4.4 விழுக்காடாக குறைந்துள்ளது. சீனாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியின் தாழ்வு நிலை படிப்படியாக மந்தமாகி வருகிறது. இதில் ஏப்ரல் திங்களின் ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சீனச் சுங்கத் துறை தலைமைப் பணியகம் 8ஆம் நாள் தொடர்புடைய தரவுகளை வெளியிட்டுள்ளது. அன்னிய வர்த்தகத்தை நிதானப்படுத்தும் கொள்கைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் முழு ஆண்டின் நிலைமையை ஆராய்ந்து பார்த்தால் நம்பிக்கைக் கொள்ள போவதில்லை என்று நிபுணர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தை நிலைமை சரியற்ற நிலையில் அன்னிய வர்த்தகத்தில் போட்டிக்கான நிர்ப்பந்தம் கடுமையாக உள்ளது. பாரம்பரிய போட்டியாற்றலின் மேம்பாடு படிப்படியாக பலவீனப்படுத்தப்பட்டது. புதிய போட்டி மேம்பாடு கடினமாக உருவாக்கப்பட்டது. இந்நிலைமையில் தற்போதைய சாதனைப் பெறுவது சீராக இருக்கிறது என்று வணிக துறை அமைச்சகத்தின் சர்வதேச வர்த்தக பொருளாதார ஒத்துழைப்பு ஆய்வகத்தின் நிபுணர் பே மீங் சுட்டிக்காட்டினார்.

புள்ளிவிபரங்களின் படி இவ்வாண்டின் முதல் 4 திங்களில் ஐரோப்பிய ஒன்றியத்தைத் தவிர, அமெரிக்கா, ஆசியான், ஜப்பான் உள்ளிட்ட பெரிய வர்த்தகக்கூட்டாளிகளுடனான சீனாவின் மொத்த வர்த்தக மொத்த தொகை குறைந்து வருகிறது. அதேவேளை ஏப்ரல் திங்களில் சீனாவின் அன்னிய வர்த்தக ஏற்றுமதி வழிக்காட்டி குறியீடு மீட்டு ஏறியது என்பது, 2ஆவது காலாண்டின் ஏற்றுமதி நிர்ப்பந்தம் தணிவு செய்வதாக எடுத்துக்காட்டியுள்ளது. சீனப்பொருளாதார தொடர்பு மையத்தின் பொருளாதார ஆராய்ச்சிப் பிரிவின் தலைவர் சியு ஹொங்சை இது பற்றி குறிப்பிடுகையில், இந்த தரவுகளின் மூலம் சீனாவின் அன்னிய வர்த்தகம் நிதானமாகும் நிலைமையைப் புரிந்து கொள்ளலாம் என்றார்.

தற்போது சீனாவின் வெளிநாட்டுத் தேவைச்சூழல் மறுப்பக்கத்துக்குத் திறக்கவில்லை. நிதானமாகவும் சீராகவும் வளரும் இலக்கை நனவாக்கும் வகையில் தொடர்ந்து பாடுபட வேண்டும் என்று பேட்டியளித்துள்ள நிபுணர்கள் பொதுவாக கருத்துத் தெரிவித்தனர். வணிகத்துறை அமைச்சகத்தின் ஆய்வுக்கழகத்தின் துணைத் தலைவி பேசுகையில், இவ்வாண்டு வர்த்தகத்தின் அதிகரிப்பு வேகத்தின் மீது உலக வர்த்தக அமைப்பின் முன்மதிப்பீடு இன்னும் நன்றாக இல்லை. சர்வதேச வர்த்தக அதிகரிப்பு வேகம் 3 விழுக்காட்டை விட தாழ்ந்து வரும். தவிர, உலகளவில் மிக பெரிய நாடான அமெரிக்காவின் பொருளாதார நிலைமை நன்றாக இல்லை. குறிப்பாக, அண்மையில் பொது தேர்தல் கட்டத்தில் நுழைந்துள்ளது. இது இறக்குமதிக்கான தேவை அதிகமில்லை என்பதை எடுத்துக்காட்டியது. சீன-அமெரிக்க வர்த்தகத்தில் அதன் பாதிப்பு நேராடியாக இருக்கிறது. தவிர, ரஷியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளின் அன்னிய வர்த்தகச் சூழலும் நன்றாக இல்லை என்றார் அவர்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040