இவ்வாண்டின் மே முதல் நாள் தொடங்கி, சீனாவில் தொழில் வரியை மதிப்புக் கூட்டு வரியாக மாற்றும் அமைப்பு முறை முற்றிலும் துவக்கப்பட்டுள்ளது. இந்தச் சீர்த்திருத்தத்தை சீராக நடைமுறைப்படுத்தும் வகையில் சென்ச்சானின் சியான்ஹெய் தடையில்லா வணிக மண்டலம் சேவை வடிவத்தைப் புதுப்பித்து, தடையில்லா வழியையும் ஆலோசனை ஜன்னலையும் திறந்து சேவை வழங்கியுள்ளது.
அமைப்பு முறைமையின் புத்தாக்கம், சான்ச்சான் பொருளாதாரம் வேகமாக வளர்வதற்கான முக்கிய உந்து ஆற்றலாகியுள்ளது. அதன் மூலம் தொழில் நிறுவனங்கள் தற்சார்புப் புத்தாக்கத்தை விரைவுபடுத்துவதற்கு உரிய சூழ்நிலை மேலும் நன்றாக வளர்ச்சியடைந்துள்ளது.
சென்ச்சான் லுங்காங் பிரசேதத்திலுள்ள தியென் ஆன் யூன் கூ தொழில் துறை மண்டலத்தில் தொலைத்தொடர்புத் தொழில் நுட்பம், இயந்திர மனிதர் ஆராய்ச்சி வளர்ச்சி முதலியவற்றில் ஈடுப்பட்ட 200க்கும் மேலான நிறுவனங்கள் உள்ளன. இம்மண்டலம், தொழில் நிறுவனங்களின் வளர்ச்சித் தேவையைச் சுற்றி, வேறுபட்ட மேடையை உருவாக்கி, தொழில் நிறுவனங்கள் சர்வதேசமயமாகுவதற்கு வழிகாட்டி, வணிகத்துக்குத் துணைபுரியும் சூழ்நிலையை உருவாக்கி வழங்கி வருகிறது. குறிப்பாக, உறைவிடம், மருத்துவம், கல்வி, சட்ட அமைப்பு, அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு ஆகிய சூழ்நிலைகளில் அரசாங்கம் தொழில் நிறுவனங்களுடன் ஒத்துழைக்கலாம்.
தற்போது, அமைப்பு முறைப் புத்தாக்கம் மூலம், வினியோக முறை சீர்திருத்தத்தை விரைவுபடுத்துவதில் பல்வேறு நிர்வாக வாரியங்கள் ஒத்தக்கருத்துக்களை வந்துள்ளன. இவ்வாண்டின் மார்ச் திங்கள் இறுதியில் சான்ச்சான் நகரம், 3 முக்கிய ஆவணங்களை வெளியிட்டு, அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்கம், தொழில் நிறுவனத்தின் வளர்ச்சி, திறமைசாலிகளை ஈர்ப்பது ஆகிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு துறைகளில் தொழில் நிறுவனங்களின் போட்டியாற்றலை உயர்த்தி, சென்ச்சான் அறிவியல் தொழில் நுட்பத் தொழில் துறையின் புத்தாக்க மையத்தைக் கட்டும் மனஉறுதியை வலுப்படுத்துவோம் என்று இந்நகரத்தின் பொருளாதார வர்த்தக தகவல் குழுவின் இயக்குநர் கோ லி மின் கூறினார்.