• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தென்-வட கொரிய உறவு
  2016-05-25 09:10:43  cri எழுத்தின் அளவு:  A A A   

இரு தரப்பு இராணுவத் துறை பேச்சுவார்த்தை பற்றி விவாதிக்கும் வகையில் தொடர்பு மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை வட கொரிய தேசிய பாதுகாப்பு ஆணையம் தென் கொரிய தரப்பிடம் மீண்டும் தெரிவித்துள்ளது. ஆனால், தென் கொரியா இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது என்று கொரிய மத்திய செய்தி நிறுவனம் 24ஆம் நாள் கூறியது.

இது குறித்து யுன்ஹப் செய்தி நிறுவனம் தென் கொரிய தேசிய பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து கிடைத்த தகவலை மேற்கோள்காட்டி வெளியிட்ட செய்தியில், அணு ஆயுதமின்மை நடவடிக்கையை வட கொரியா மேற்கொள்ள வேண்டும் என்பது இப்பேச்சுவார்த்தைக்கான முன் நிபந்தனையாகும் என்று கூறியது. இப்பிரச்சனை குறித்து வட கொரியா தனது நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்த வேண்டும் என்று தென் கொரியா தரப்பு வலியுறுத்தியது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040