• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஜி-20 குழுவின் உச்சிமாநாட்டை வரவேற்கும் ஹாங்சோ நகரம்
  2016-05-26 13:23:05  cri எழுத்தின் அளவு:  A A A   
ஜி-20 எனும் 20 நாடுகள் குழுவின் 2016ஆம் ஆண்டு மாநாடு செப்டம்பர் 4 மற்றும் 5ஆம் நாட்களில் சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற உள்ளது. இம்மாநாட்டுக்கான பல்வேறு ஆயத்தப் பணிகள் சீராக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வளர்ந்த நாடுகளுக்கும் புதிதாக வளர்ந்து வரும் நாடுகளுக்கும் குறிப்பிட்ட பிரச்சினைகள் பற்றி வெளிப்படையாகவும் ஆக்கப்பூர்வமாகவும் கலந்தாய்வு மேற்கொள்ளப்படும். அதன்மூலம் ஒத்துழைப்பு வாய்ப்புகளைத் தேடி ஒத்துழைப்பை முன்னேற்றி, பன்னாட்டு நிதித் துறையின் நிதானத்தையும் தொடரவல்ல வளர்ச்சியையும் நாடுவது இவ்வமைப்பின் இலக்காகும். அமெரிக்கா, ஜெர்மனி, ரஷியா, சீனா, இந்தியா, பிரேசில் முதலியவை அதன் உறுப்பு நாடுகளாகும். இந்த 20 நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு முழு உலகப் பொருளாதார அளவில் 90 விழுக்காடும், அவற்றின் மொத்த வர்த்தக தொகை உலகில் 80 விழுக்காடும் வகிக்கின்றன.

வரும் ஜி-20 அமைப்பின் உச்சிமாநாட்டுக்கான அரங்குகளின் கட்டுமானம். சுற்றுச்சூழல் மேம்பாடு, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு ஆயத்தப் பணிகள் கடந்த ஆண்டு முதல் ஹாங்சோ நகரில் மேற்கொள்ளப்பட துவங்கின. உள்ளூர் மக்களும் இம்மாநாட்டுக்குப் பெரும் வரவேற்பை தெரிவித்துள்ளனர்.

எமது ஹாங்சோ அழகான நகரமாகும். இம்மாநாடு மூலம் மேலதிக மக்கள் ஹாங்சோ பற்றி அறிந்து கொள்ளலாம். அவர்கள் ஹாங்சோவில் பயணம் செய்வதே வரவேற்கின்றோம் என்று நகரவாசி ஒருவர் கூறினார்.

இம்மாநாட்டை வரவேற்க ஹாங்சோ நகரில் சிறப்பாக இரவு விலக்கு காட்சி திட்டப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் மூலம் இந்நகரிலுள்ள புகழ்பெற்ற மேற்கு ஏரி மற்றும் அதற்கு அருகிலுள்ள 10 காட்சி இடங்கள் இரவிலும் அழகான காட்சியை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் பாதுகாப்புப் பணியில் ஹாங்சோ நகர் முழு மூச்சுடன் ஈடுபடும் என்று கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஹாங்சோ நகர் குழுவின் பொதுச் செயலாளர் சௌ யீதே கூறினார்.

நடப்பு உச்சிமாநாடு மூலம், உலகிற்கு ஹாங்சோ பற்றியும் சீனா பற்றியும் அறிமுகம் செய்ய விரும்புகின்றோம். இதில் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்பு, நவீனமயமாக்க கட்டுமானம் ஆகியவற்றில் சீனா பெற்றுள்ள சாதனைகளும் சீன மக்களின் வாழ்க்கையும் உலகிற்கு அறிமுகம் செய்யப்படும். பல்வேறு ஆயத்த பணிகளை செவ்வனே மேற்கொண்டு இம்மாநாடு ஹாங்சோவில் வெற்றிகரமாக நடைபெறுவதற்கு உத்தரவாதம் அளிப்போம் என்று அவர் கூறினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040