மேலை நாடுகளில் சீனாவுக்கும் இந்தியாவுக்கு இடையில் தீவிர போட்டி நிலவுகிறது என்ற கூற்றுக்கு அடிக்கடி 3 காரணங்கள் மேற்கோள் காட்டப்படுகின்றன.
ஒன்று, புவிஅமைவு அரசியல் துறையிலும் உலக நெடுநோக்குத் திட்டத்தை வகுப்பதிலும் சீனாவும் இந்தியாவும் போட்டியிடுகின்றன. இப்படி கூறுவதன் மூலம் இரு நாடுகளை இரு குழுக்களாகப் பிரிக்க மேலை நாடுகள் முயன்று வருகின்றன.
இரண்டு, சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் நிலவும் வர்த்தக நிலுவையை குறிப்பிட்ட நோக்கத்துடன் சுட்டிக்காட்டி முரண்பாடுகளை எழுப்புதல்.
மூன்று, எல்லைப் பிரச்சினை உள்ளிட்டவற்றை பயன்படுத்தி சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கருத்துவேற்றுமையை பெரிதாக்கும் முயற்சி.
எடுத்துக்காட்டாக கடந்த ஆண்டு ஜுன் திங்கள், இவ்வாண்டு ஏப்ரல் திங்கள் அமெரிக்க பாதுகாப்ப மைச்சர் கார்டர் இந்தியாவில் பயணம் மேற்கொண்டார். இது பற்றி ராய்டஸ் நிறுவனம் வெளியிட்ட செய்தியில், இந்தியாவுக்கு கார்டர் இவ்வளவு அன்பை காட்டுவதற்கான நோக்கம், இந்தியாவுடன் ராணுவத் துறை ஒத்துழைப்பை மேற்கொண்டு, இந்தியாவுடன் இடைவிடாமல் வலுவடைந்து வரும் சீனாவை மட்டுப்படுத்துவதுதான் மையப்புள்ளி என்று கூறப்பட்டது.
ஆனால், நடைமுறையில், சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் கருத்துவேற்றுமையை விட ஒத்த கருத்துக்கள் அதிகம். போட்டியை விட ஒத்துழைப்பு மேலும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று இரு நாடுகளும் தெளிவாக அறிந்து கொண்டுள்ளன.
இரு தரப்புறவைக் கையாள்வதற்கு சீனாவுக்கும் இந்தியாவுக்கும் போதுமான திறமையும் ஆற்றலும் உண்டு. இரு தரப்பு ஒத்துழைப்பை மேலும் ஆழமாக்க இரு நாடுகளின் தலைவர்கள் பயன் தரும் முறையிலும் நெடுநோக்கு பார்வையுடனும் பாடுபட்டு வருகின்றனர்.
சீன ஆற்றலும் இந்திய திறமையும் இணைந்து வளரலாம். உலகத் தொழிற்சாலையும் உலக அலுவலகமும் நன்றாக ஒத்துழைக்கலாம். சீன-இந்திய ஒத்துழைப்பின் ஆற்றலை சிறப்பாக வெளிப்படுத்தினால், ஆசியா நன்மை பெறும். உலகம் நன்மை பெறும்.