சமூகம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான உறுதியான ஆதரவாகவும் நெடுநோக்கு உத்தரவாதமாகவும் கடல் திகழ்கின்றது. ஆனால் சமூகம் மற்றும் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ள நிலையில், கடல் வளம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி சீனச் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறையின் துணை அமைச்சர் ஹுவாங் ரன் சியூ கூறியதாவது,
முதலாவதாக, கரையோர கடல் பகுதியில் கடல் நீரின் தரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இரண்டாவதாக, கடலோர பிரதேசத்தில் தொழில் துறையின் வளர்ச்சிக்கும் மூலவளச் சுற்றுச்சூழலுக்கும் இடையிலான முரண்பாடு நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. கடலில் நில அமைவுப் பணி, அளவுக்கு மீறியதாக மேற்கொள்ளப்பட்டது, கடல் உயிரின வாழ்க்கை சூழலைப் பெரிதும் பாதித்துள்ளது. மூன்றாவதாக, கடல் சுற்றுச்சூழல் மற்றும் கண்காணிப்புப் பணி மேலும் வலுப்படுத்தப்பட வேண்டியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
சீரான உயராற்றல் மிக்க, தற்காப்புத் தன்மை வாய்ந்த கடல், மனிதரின் உடல் நலம் மற்றும் தொடரவல்ல வளர்ச்சிக்கான உத்தரவாதமாகும். தற்போது உலகளவில் சுமார் 40 விழுக்காடு கடல் பரப்பு மனிதரின் செயல்பாடுகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் சுமார் 80 விழுக்காடு கடலில் கலந்து வருகிறது. சுற்றுச்சூழல் மாசுபாட்டினால் ஏற்படும் சுகாதாரப் பிரச்சினை மனிதருக்கு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
பூமியின் மேற்பரப்பில் சுமார் 70 விழுக்காடு கடலாகும். கடல் பூமியிலுள்ள உயரினங்களுக்கு ஆதாரமாக உள்ளது. உணவுப் பொருட்கள், சுத்தமான காற்று, நிதானமான காலநிலை, மழை, சுத்தமான குடிநீர் முதலியவற்றை உலகில் கோடிக்கணக்கான மக்கள் கடல் மூலம் பெறுகின்றனர்.
ஆகவே, கடல் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது, கடலின் சீரான நிலைமையைப் பேணிக்காப்பது ஒவ்வோருவரின் கடமை ஆகும். அதேவேளையில், நேர்மையான மற்றும் அமைதியான பன்னாட்டு கடல் ஒழுங்குமுறையைப் பேணிக்காப்பது முழு மனித குல இன்பத்தின் அடிப்படையாகும்.
கடல் தொடர்பான பல்வகை பிரச்சனைகளைச் சமாளிக்க அனைத்து நாடுகளும் முழு மனதுடன் இணைந்து பாதுகாக்க வேண்டும்.