• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
2ஆவது சீன-மத்திய கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார மற்றும் வர்த்தக முன்னேற்ற அமைச்சர் நிலை கூட்டம்
  2016-06-10 15:43:50  cri எழுத்தின் அளவு:  A A A   

2ஆவது சீன-மத்திய கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார மற்றும் வர்த்தக முன்னேற்ற அமைச்சர் நிலை கூட்டம் 9ஆம் நாள் சீனாவின் நிங்போ நகரில் நடைபெற்றது. சீன வணிக அமைச்சர் காவ் ஹுசெங், செக், போலந்து, செர்பியா உள்ளிட்ட 16 மத்திய கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார மற்றும் வர்த்தக அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், பொருளாதார வளர்ச்சி, சுற்றுலா, போக்குவரத்து, அடிப்படை வசதி முதலியவை விவாதிக்கப்பட்டன. கூட்டத்துக்குப் பின் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இரு தரப்புகளும் நிங்போ அறிக்கையை வெளியிட்டன.

சீன வணிக அமைச்சர் காவ் ஹுசெங் கூறியதாவது

இவ்வறிக்கை பன்முகங்களிலும் புறநிலையிலும் சமமான நிலையிலும் பல்வேறு தரப்புகளின் அக்கறைகளையும் நலன்களையும் வெளிப்படுத்தியுள்ளது. வர்த்தகம் மற்றும் முதலீட்டு அளவை விரிவாக்குவது பற்றி இரு தரப்புகளும் முன்மொழிவுகளை முன்வைத்து பல பொது கருத்துக்களை எட்டியுள்ளன என்று அவர் கூறினார்.

2014ஆம் ஆண்டு முதலாவது அமைச்சர் நிலை கூட்டம் நடைபெற்ற பின் இரு தரப்புகள் பெற்றுள்ள சாதனைகளை நடப்பு கூட்டம் தொகுத்து, "சீன-மத்திய கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத் துறை ஒத்துழைப்பின் பட்டியலை"வெளியிட்டது. இந்தப் பட்டியலின்படி இரு தரப்புகளும் சிறப்பு வர்த்தகப் பேச்சுவார்த்தை நடத்தின. 200க்கும் அதிகமான சீன வணிகர்களும் 100க்கும் மேற்பட்ட மத்திய கிழக்கு ஐரோப்பிய வணிகர்களும் இதில் கலந்து கொண்டனர்.

சீனாவின் சந்தை பொருளாதார தகுநிலையை ஏற்றுக்கொள்வதற்கு எதிரான தீர்மானம் ஒன்றை ஐரோப்பிய நாடாளுமன்றம் அண்மையில் நிறைவேற்றியுள்ளது. அதனைத் தெளிவாக எதிர்ப்பதாக ஐரோப்பிய நாடான ஹங்கேரியின் வெளியுறவு மற்றும் வெளிநாட்டுப் பொருளாதாரத் துறை அமைச்சர் ஸிஜார்டோ தெரிவித்துள்ளார். நிங்போ நகரில் நடைபெற்ற சீன-மத்திய கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார மற்றும் வர்த்தக முன்னேற்ற அமைச்சர் நிலை கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் பேசுகையில், இரு தரப்பு ஒத்துழைப்புக்கு ஒன்றை ஒன்று நம்புவதும் ஒன்றை ஒன்று முன்னேற்றுவதும் முக்கியமானதாகும் என்று குறிப்பிட்டார். சீனாவுடன் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத் துறை ஒத்துழைப்பு மேற்கொள்ளும் ஐரோப்பிய நாடுகள் சீனாவின் சந்தை பொருளாதாரத் தகுநிலையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.

 

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040