• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பெய்ஜிங்:பேரரசு அரண்மனை
  2016-06-17 18:56:20  cri எழுத்தின் அளவு:  A A A   

பெய்ஜிங்கில் அமைந்துள்ள பேரரசு அரண்மனை, உலகிலுள்ள 5 புகழ்பெற்ற அரண்மனைகளில் முதலிடம் வகிக்கிறது. பயணமாக பெய்ஜிங்கிற்கு வந்தவர்கள் அனைவரும் இந்த அரண்மனையைப் பார்வையிட வேண்டும். உயரமான நகரச்சுவர், கனமான கதவு, கம்பீரமான மண்டபம் ஆகியவை, உச்ச நிலையிலான பேரரசாட்சியை முற்றிலும் வெளிப்படுத்துகின்றன. மத்திய அச்சு கோட்டில், ஆட்சி மையமான உச்ச நிலை இணக்க மண்டபம், நடுநிலை இணக்க மண்டபம், இணக்கத்தை பேணிக்காக்கும் மண்டபம் ஆகியவை உள்ளன. அவை பேரரசு அரண்மனையில் மக்களின் கவனத்துக்குரிய கட்டிடங்களாகும். மேலும், பேரரசர் மற்றும் அவரது வாழ்க்கைத் துணைவர் ஓய்வெடுத்து மனமகிழ் செய்து பொழுது போக்கும் பேரரசுத் தோட்டம் பார்வையிடத்தக்க இடம் ஆகும்.

சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் கட்டிமுடிக்கப்பட்ட பேரரசு அரண்மனை, மிங் மற்றும் சிங் வம்சத்தின் ஏற்றத்தாழ்வை தாக்குப் பிடித்து, இன்றுவரை பார்வையாளர்களுக்கு வியப்பு தரக்கூடிய அழகிய தோற்றத்தை அளித்து வருகிறது. சீனாவில் பழமை வாய்ந்த மிகப் பெரிய, மிக முழுமையான கட்டிடக் குழுவாக அது திகழ்கிறது. மிக அதிகமான பொருட்களைச் சேகரிக்கும் அருங்காட்சியகம் அதுவாகும்.

நடுவரை வாயில், தடுக்கப்பட்ட நகரத்தின் முக்கிய முன்புற நுழைவாயில். அதற்குப் பின், சீன தேசத்தின் நீண்டகால நாகரிகத்தைச் சேமிக்கும் பேரரசு மண்டபங்கள் காணப்படுகின்றன.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040