சீனாவின் கிழக்கில் யாலு ஆற்றில் தொடங்கும் சீனப் பெருஞ்சுவர் மேற்கில் சியா யூ நுழைவாயிலில் முடிவடைகிறது. இதன் மொத்த நீளம் 10 ஆயிரம் கிலோமீட்டருக்கும் அதிகம்.
பெருஞ்சுவர் லியாவ்நிங், ஹே பேய் ,தியன் ச்சின், பெய்ஜிங், உள் மங்கோலியா, சான்சி, ஷான்சி, நின்சியா, கான் சு ஆகிய 9 மாநிலங்கள்,மாநகரங்கள், தன்னாட்சிப் பிரதேசங்கள் ஆகியவற்றின் ஊடாக வளைந்து நெளிந்து செல்கின்றது.
வரலாற்றில் மிக நீண்ட காலமாக பெருஞ்சுவர் முக்கிய பாதுகாப்புப் பயனைத் தந்துள்ளது.
பெருஞ்சுவர் நெடுகிலும் அமைக்கப்பட்ட போக்குவாரத்துப் பாதை, மத்திய ஆசியா, மேற்காசியா, தெற்காசியா ஆகியவற்றை இணைக்கும் முக்கிய ஊடுவழியாகும்
பெருஞ்சுவர் பற்றி பல கதைகள் உள்ளன. அவற்றில் மங் ச்சியாங் நியூ என்ற பெண்மணி பற்றிய கதை மிகவும் புகழ்பெற்றது.
பெருஞ்சுவரைக் கட்டியமைக்க அவருடைய கணவர் அழைக்கப்பட்டார். பல ஆண்டுகள் கழிந்தும், அவர் திரும்பவில்லை. அவரைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை.
கணவரைத் தேடிக் கண்டு பிடிக்க, மங் ச்சியாங் நியூ பல இன்னல்களைச் சமாளித்து கடைசியில் பெருஞ்சுவரின் அடிவாரத்தை அடைந்தார். கணவரைக் காணாத மங் ச்சியாங் நியூ பெருஞ்சுவரின் அடிவாரத்தில் 3 நாட்கள் இரவும் பகலுமாக தொடர்ந்து அழுதார்.
பெருஞ்சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்த பிறகும் கூட கணவரை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை.