தாங் வம்சக் காலத்தில், புகழ்பெற்ற புத்த துறவி சுவான் சாங் இந்தியாவிலிருந்து அதிகமான புத்த மதத் திருமுறைகள், புத்தச் சிலைகள், புத்தரின் எச்சங்கள் ஆகியவற்றைச் சீனாவுக்கு எடுத்து வந்தார்.
இத்தகைய விலை மதிப்பற்ற பொருட்களைப் பாதுகாக்கும் வகையில், தா யான் பகோடாவைக் கட்டியமைப்பதற்கு அரசின் ஆதரவுடன் சுவான் ச்சாங் தலைமைத் தாங்கினார். இந்தியாவின் பண்டைகாலத்திலுள்ள கட்டிடங்களின் தனிச்சிறப்பு, சீனப் பாரம்பரிய பண்பாடுகளுடன் ஒன்றிணைத்திருப்பதை இந்தப் பகோடா சான்றுரைக்கிறது.