சின் வம்சத்தின் முதல் பேரரசரின் சுடுமண் வீரர் சிலை
சின் ஷூஹாவாங் என்று அழைக்கப்பட்ட பேரரசர், சீன வரலாற்றின் முதலாவது பேரரசராவார். இவரது சுடுமண் வீரர் சிலை, அவரது கல்லறையிலிருந்து தோண்டியெடுக்கப்பட்டது. இது தோண்டிருயெடுக்கப்பட்ட போர்வீரர்களின் உருவச்சிலைகளில் பெரியதாகும். 8 ஆயிரத்துக்கும் மேலான சுடுமண் வீரர் மற்றும் குதிரை சிலைகள், பல்லாயிரக்கணக்கான ஆயுதங்கள் இதில் அடக்கம்.
உலகின் பண்பாட்டு மரபு செல்வங்களின் பட்டியலில் யுனெஸ்கோ இதைச் சேர்த்துள்ளது.