பெய்ஜிங்கில் மிகப் புகழ்பெற்ற வணிகப் பகுதியான வாங் ஃபூ ஜிங், பொன் வீதி என போற்றப்படுகிறது. இந்தப் பகுதி 700 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறுடையது. வாங் ஃபூ ஜிங் வீதி, கிழக்கு க்ஷாங் ஆன் வீதியின் வடக்கில் அமைந்துள்ளது. அகலமான வீதியில், நூற்றுக்கணக்கான கடைகள் உள்ளன. உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் புகழ்பெற்ற இந்தக் கடைகளால் உருவான வணிகச் சூழ்நிலை, பண்டைகால அழகுடைய பெய்ஜிங்கில் சிறப்பாகக் காணப்படுகிறது.