• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பெய்ஜிங்கில் சுற்றுலா பயணக் குறிப்புகள்
  2016-06-17 19:08:37  cri எழுத்தின் அளவு:  A A A   

வணக்கம். நேயர்களே, பெய்சிங் மாநகரம் பற்றிய சில பயன்மிக்க தகவல்களை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறோம். அறிவிப்பாளர் தமிழன்பன்.

பெய்சிங் மாநகர், சீன மக்கள் குடியரசின் தலைநகரமாகும். இது, சீனாவின் இரண்டாவது பெரிய நகரமாகவும், சீனாவின் அரசியல் மற்றும் பண்பாட்டு மையமாகவும் திகழ்கின்றது. பெய்சிங், உலகிலுள்ள புகழ்பெற்ற பழமைவாய்ந்த நகரமாகவும், நவீனமயமாகி வரும் சர்வதேச நகரமாகவும் விளங்குகின்றது.

பெய்சிங், வட சீனச் சமவெளியின் வட கிழக்கு விளிம்பில் அமைந்துள்ளது. யான் ஷான் மலையடிவாரத்தில் இருக்கின்ற பெய்சிங் மாநகரத்தின் தென் மேற்குப் பகுதி வழியாக, யொங் திங் ஆறு ஓடுகிறது. தியன் ஜின் நகரம், ஹெபெய் மாநிலம் ஆகியவற்றை ஒட்டி பெய்சிங் அமைந்துள்ளது. பெய்சிங் மாநகரின் மொத்த நிலப்பரப்பு, சுமார் 16 ஆயிரத்து 410 சதுர கிலோமீட்டர் ஆகும். அதில் நகரப்பகுதியின் நிலப்பரப்பு சமார் 12 ஆயிரம் சதுர கிலோமீட்டர் ஆகும்.

பெய்சிங், சீனாவின் புகழ் பெற்ற பழமைவாய்ந்த நான்கு மாநகரங்களில் ஒன்றாகும். பெய்சிங், நகரமாக சுமார் 3000 ஆண்டுகளின் வரலாறும், தலைநகராக, சுமார் 860 ஆண்டுகளின் வரலாறும் கொண்டுள்ளது. பெய்சிங்கில் 6 உலக நிலை பண்பாட்டு மரபுச் செல்வங்கள் உள்ளன. உலகில் மிக அதிகமான பண்பாட்டு மரபுச் செல்வங்களைக் கொண்டுள்ள நகரமாக பெய்சிங் திகழ்கிறது.

பெய்சிங்கில் வரலாற்று சின்னங்களும், பண்பாட்டு தலங்களும் அதிகம். 200க்கு மேலான இயற்கைக்காட்சி தலங்கள் பயணிகளுக்குத் திறந்து வைக்கப்பட்டுள்ளன. உலகில் மிக மகத்தான அரண்மனை, தியன் டன் எனப்படும் சொர்க்க கோயில், முந்தைய அரசக் குடும்பப் பூங்காவான பெய் ஹெய், யீ ஹே யுவன் எனப்படும் கோடைக்கால மாளிகை, யுவன் மிங் யுவன் என்ற குளிர்கால மாளிகை, பா தா லிங் பெருஞ்சுவர், மு தியன் யூ பெருஞ்சுவர், நாலா பக்க வீடுகளும் நடுவில் முற்றமும் கொண்ட உலகளாவிய மிக பெரிய கட்டடம் ஆகியவை அந்த இயற்கைக் காட்சித் தலங்களில் அடங்குகின்றன. நேயர்களான நண்பர்கள், பெய்சிங்கிற்கு வருகை தரும்போது, இந்த இயற்கைக் காட்சி தலங்களைப் பார்வையிடுவதை வரவேற்கி்றோம்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040