• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சிசி தேசிய சதுப்பு நிலப் பூங்காவில் பயணக் குறிப்புகள்
  2016-06-17 19:10:47  cri எழுத்தின் அளவு:  A A A   

வணக்கம். நேயர்களே, சிசி சதுப்பு நிலம் பற்றிய சில பயன்மிக்க தகவல்களை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறோம். அறிவிப்பாளர் தமிழன்பன்.

சிசி தேசிய சதுப்பு நிலப் பூங்கா, சீனாவின் செச்சியாங் மாநிலத்தின் ஹாங்சோ நகரின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. நகரின் நுரையீரல் என அழைக்கப்படும் இப்பூங்காவின் மொத்த நிலப்பரப்பு சுமார் 10.08 சதுர கிலோமீட்டர் ஆகும். தற்போது, இப்பூங்காவில் சுமார் 3.46 சதுர கிலோமீட்டர் உடைய நிலப்பரப்பு, பயணிகளுக்குத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இப்பூங்கா, புகழ் பெற்ற சி ஹூ ஏரியிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் தான் உள்ளது. இப்பூங்காவில் அதிகமான இயற்கை மற்றும் பண்பாட்டுத் தலங்கள் காணப்படுகின்றன.

சிசி தேசிய சதுப்பு நிலப் பூங்காவின் நுழைவுச்சீட்டின் விலை, 85 யுவானாகும். ஆண்டுதோறும் ஏப்ரல் திங்கள் முதல் நாள் தொடக்கம், அக்டோபர் திங்கள் 31ஆம் நாள் வரை, நாள்தோறும் காலை 8:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை இப்பூங்கா பயணிகளுக்கு திறக்கப்படுகிறது. நவம்பர் திங்கள் முதல் நாள் தொடக்கம், அடுத்த ஆண்டு மார்ச் திங்கள் 31ஆம் நாள் வரை காலை 8:30 மணி முதல் மாலை 5 மணி வரை இப்பூங்கா பயணிகளுக்காக திறந்திருக்கும்.

ஹாங் சோ நகரிலிருந்து அங்கே செல்லும் பல பேருந்துகள் உள்ளன. பேருந்து தடம் எண்கள் 830, K506, K310, 306, 346, Y13 சிறப்புப் பேருந்து மூலம் Zhou Jia Cun என்னும் நிலையத்தை அடைந்து, இப்பூங்காவுக்கு நடந்து சென்றடையலாம். பேருந்து கட்டணம், ஒரு யுவான் முதல் நான்கு யுவான் வரை வேறுபடுகிறது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040