கடந்த 95 ஆண்டுகளில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றை அவர் மீளாய்வு செய்தார்.
1921ஆம் ஆண்டு மே 4 இயக்கத்துக்குப் பின், சீனத் தேசம் வெளிநாடுகளின் ஊடுருவல், உள்நாட்டு சமூக கொந்தளிப்பு ஆகியவற்றை எதிர்நோக்கியது. மார்க்சிஸ் லெனினிசம், சீனத் தொழிலாளர்களின் இயக்கத்துடன் இணைந்த காலத்தில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டது என்று அவர் கூறினார்.
சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டப் பிறகு உலகில் மிக அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டுக்குச் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை தாங்கி, சீனத் தனிச்சிறப்புடைய சோஷலிச வளர்ச்சி வழிமுறையை ஆய்வு செய்து முன்னேறி வருகின்றது. கடந்த சுமார் 30 ஆண்டுகளின் சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்பு மூலம், தற்போது சீனா உலகில் 2ஆவது பெரிய பொருளாதார நாடாக மாறியுள்ளது.
சீர்திருத்தத்தை ஆழமாக்கி, மக்களை மையமாகக் கொண்ட வளர்ச்சியில் ஈடுபட வேண்டும் என்றும், வளர்ச்சி கனிகளை அனைத்து மக்களுக்கும் நேர்மையாக வழங்க வேண்டும் என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
அமைதி நோக்கிற்கான வளர்ச்சிப் பாதையில் சீனா எப்போதும் ஊன்றி நிற்பதாகவும், ஒன்றுக்கு ஒன்று நலன் தரும் வெளிநாட்டுத் திறப்புக் கொள்கையை உறுதியாகக் கடைப்பிடிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போது நாடளவில் 8 கோடியே 80 இலட்சத்துக்கு அதிகமான கட்சி உறுப்பினர்கள் உள்ளனர். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 130 கோடி மக்கள் தொகை கொண்ட பெரிய நாட்டை ஆட்சி புரிந்து, பல்வகை சோதனைகள் மற்றும் சிக்கல்களைச் சமாளித்து வளர்ந்து வருகின்றது. எதிர்காலத்தில் மக்களுக்கு மனநிறைவு தரும் புதிய சாதனைகளை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி பெறும் என்று ஷி ச்சின்பீங் தனது உரையின் இறுதியில் வாக்குறுதி அளித்தார்.