• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சிங்காய்-திபெத் இருப்புப் பாதையின் 10 ஆண்டுகள்
  2016-07-05 15:43:07  cri எழுத்தின் அளவு:  A A A   
உலகில் மிக உயரமான இடத்தில் கட்டியமைக்கப்பட்ட சிங்காய்-திபெத் இருப்புப் பாதையில் அதிகாரப்பூர்வமாக 2006ஆம் ஆண்டு ஜுலை திங்கள் முதல் நாள் போக்குவரத்துச் சேவை தொடங்கப்பட்டது. திபெத்தில் கட்டியமைக்கப்பட்ட இந்த முதலாவது இருப்புப் பாதை திபெத்தின் சுற்றுலாத் துறை உள்பட இப்பிரதேசத்தின் பொருளாதாரத் துறைக்கு மாபெரும் முன்னேற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் பெய்ஜிங் நகரவாசி திரு சென், தனது தந்தையுடன் திபெத்தில் பயணம் மேற்கொண்டனர். அவர்கள் முதலில் சினிங் நகரத்துக்குச் சென்று, அங்கிருந்து லாசாவுக்குச் செல்லும் தொடர்வண்டியில் ஏறினர்.
தொடர்வண்டி மூலம் பயணித்த போது வழியில், பனி மலை, புல்வெளி, ஏரி ஆகியவற்றைக் கண்டுகரித்தோம். அவை மிகவும் அழகான காட்சிகள் என்று திரு சென் கூறினார்.
அவருடைய தந்தை 60 வயதுக்கும் மேலானவர். விமானம் மூலம் லாசாவுக்குச் சென்றால் உடனடியாக பீடபூமியின் தாழ்ந்த காற்று அழுத்தத்தை அவரால் தாங்க முடியாது என்ற கவலையினால் அவர்கள் தொடர்வண்டி பயணத்தைத் தேர்ந்தெடுத்தனர்.
சினிங் நகரிலிருந்து லாசாவுக்குச் செல்லும் இருப்புப்பாதையின் மொத்த நீளம் 1956 கிலோமீட்டராகும். இதுவரை, 11 கோடியே 50 இலட்சம் பயணிகளும், 44 கோடியே 80 இலட்சம் டன் சரக்குகளும் இதன் மூலம் பயணித்தனர். போக்குவரத்து வசதியின் மேம்பாடு காரணமாக, திபெத்தில் அதிக பயணிகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். பயணியர் சேவை நிறுவனத்தின் ஒரு பணியாளர் கூறியதாவது
நாங்கள் சேவை புரியும் பயணியர்களில் சுமார் 70 விழுக்காட்டினர் சிங்காய்-திபெத் இருப்புப்பாதை மூலம் திபெத்தை அடைந்தவர்களாவர்.
அதனுடன் திபெத்தின் சுற்றுலா, உணவு, சில்லறை விற்பனை முதலிய துறைகள் விரைவாக வளர்ந்து வருகின்றன.
எடுத்தக்காட்டாக திபெத் நிங்ச்சி நகரைச் சேர்ந்த லின்துங் என்பவர் முன்பு லாசாவிலுள்ள ஒரு நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணி புரிந்தார். ஆனால் வருமானம் குறைவாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் அவரது சொந்த ஊருக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. இதன் காரணமாக அவர் ஒரு குடும்ப உணவுவிடுதியை ஆரம்பித்தார். தற்போது ஆண்டுக்கு வருமானமாக ஒரு இலட்சம் யுவானுக்கு மேல் ஈட்டி வருகின்றார்.
திபெத் சுற்றுலா பணியகம் வழங்கிய புள்ளிவிபரங்களின்படி, திபெத்தில் பயணம் மேற்கொண்ட பயணிகளின் எண்ணிக்கை 2005ஆம் ஆண்டு இருந்த 18 இலட்சத்திலிருந்து 2015ஆம் ஆண்டில் 2 கோடியாக அதிகரித்துள்ளது. சுற்றுலா வருமானமும் 14 மடங்கிற்கு மேலாக அதிகரித்துள்ளது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• இந்தியா, மோரீஷியஸ் இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்து
• சீனா, நேபாள எல்லை கடந்த ஒளிஇழை பிணையம்
• இலங்கை-சீன வர்த்தக மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பு
• கிழக்கு சீனக் கடல் மற்றும் தென் சீனக் கடல் பிரச்சினை பற்றி சீன வெளியுறவு அமைச்சகத்தின் பதில்
• லீக்கெச்சியாங்கின் பயணம் பற்றி சீன வெளியுறவு அமைச்சகத்தின் கூட்டம்
• அமெரிக்க விமானத்தை இடைமறித்தல் தொடர்பாக சீனாவின் பதில்
• பிரிட்டனில் பயங்கர அச்சுறுத்தலின் நிலை குறைப்பு
• பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் தாராள வர்த்தகத்தில் ஏழு நாடுகள் குழு ஒத்த கருத்து
• சீன தலைவர்கள் எகிப்துத் தலைவர்களுக்கான ஆறுதல் செய்தி
• சீனாவின் ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் அடிப்படை சட்டம் செயல்படுத்தப்பட்ட 20ஆவது ஆண்டு நிறைவு பற்றிய கூட்டம்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040