• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தென் சீனக் கடல் பிரச்சினை பற்றிய சீனாவின் நிலைப்பாடு
  2016-07-12 20:41:57  cri எழுத்தின் அளவு:  A A A   
பிலிப்பைன்ஸின் கோரிக்கையின்படி நிறுவப்பட்ட தென் சீனக் கடல் நடுவர் தீர்ப்பு மன்றம் 12ஆம் நாள் வெளியிட்ட தீர்ப்பு குறித்து, சீன வெளியுறவு அமைச்சகம் அறிக்கையை வெளியிட்டுள்ளது. சீனா இத்தீர்ப்பு முடிவை ஏற்றுக்கொள்ளாது என்று இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், தென் சீனக் கடலுக்கான சீனாவின் இறையாண்மை மற்றும் உரிமை நலன்கள் தொடர்பான அறிக்கையை சீன அரசு வெளியிட்டது. சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ இது குறித்து முக்கிய உரைநிகழ்த்தியபோது, தென் சீனக் கடல் நடுவர் தீர்ப்பு, சட்டம் என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒரு அரசியல் கேலிக் கூத்துமாகும் என்றார். மேலும், தென் சீனக் கடல் மீதான இறையாண்மை மற்றும் கடல் உரிமை நலன்கள், வரலாற்று மற்றும் சட்டங்களின் அடிப்படையில், இத்தீர்ப்பு முடிவினால் பாதிக்கப்படாது என்றும் வாங் யீ குறிப்பிட்டார்.

சீன வெளியுறவு அமைச்சகம் 12-ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில், தென் சீனக் கடல் மீதான சீனாவின் இறையாண்மை மற்றும் கடல் உரிமை நலன்களை மறுப்பதே, பிலிப்பைன்ஸ் ஒரு சார்பாக நடுவர் தீர்ப்புக்கான விண்ணப்பத்தை வழங்கியதன் நோக்கமாகும். இது, சர்வதேச சட்டத்தை மீறிய செயலாகும். சட்டத்தை மீறிய உண்மைக்கு ஆதரவில்லாத தீர்ப்பை, சீன மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதோடு, நீதியின் பக்கம் நிற்கும் சர்வதேச சமூகம் இத்தீர்ப்பை ஏற்றுக்கொள்ளாது என்று வாங் யீ தனது உரையில் தெரிவித்துள்ளார்.

பிலிப்பைன்ஸின் முன்னாள் அரசு, சில சக்திகளின் கட்டுப்பாட்டில், தென் சீனக் கடல் சர்ச்சை தொடர்பான தரப்பின் அனுமதியைப் பெறாத நிலைமையில், ஒரு சார்பாக தீர்ப்பு வழக்கை விண்ணப்பம் செய்தது. இரு தரப்புப் பேச்சுவார்த்தை மூலம் சர்ச்சையைத் தீர்க்கும் உடன்படிக்கையைப் பொருட்படுத்தாமல், தென் சீனக் கடல் பிரச்சினை தொடர்பான பல்வேறு தரப்புகளின் செயல் அறிக்கையில் அளித்துள்ள வாக்குறுதியை பிலிப்பைன்ஸ் மீறியுள்ளது. சீனாவின் இறையாண்மை மற்றும் கடல் உரிமை நலன்களை மீறி, தென் சீனக் கடல் பிரதேசத்தின் அமைதி மற்றும் நிதானத்தைச் சீர்குலைப்பது, இந்நடுவர் தீர்ப்பு வழக்கைத் தொடுத்ததன் நோக்கமாகும் என்று வாங் யீ தெரிவித்துள்ளார்.

மேலும், இந்நடுவர் தீர்ப்பு வழக்கில் சீனா பங்கெடுக்காது, தீர்ப்பு முடிவை ஏற்றுக்கொள்ளாது, இதைச் செயல்படுத்தாது. சீனாவின் நிலைப்பாடு, சர்வதேச சமூகத்தில் பெரும் ஆதரவைப் பெற்றுள்ளது. ஆனால், சில நாடுகள், தங்களது நலன்களில் கருத்தை மட்டும் கருத்தில் கொண்டு, சீனா மீது தீய நோக்கத்துடன் பழி கூறி, சர்வதேச சட்டத்தைத் துச்சமாக மதித்து வருகின்றன. இது குறித்து வாங் யீ கூறுகையில், இந்நடுவர் தீர்ப்பு வழக்கில் சீனா பங்கெடுக்காததும், தீர்ப்பு முடிவை ஏற்றுக்கொள்ளாததும், சட்டப்படி சர்வதேச சட்டங்கள் மற்றும் பிரதேசத்தின் விதிகளைப் பேணிக்காக்கும் செயலாகும் என்றார்.

இதனிடையில், சீனா தொடர்ந்து சர்வதேச சட்டத்தின்படி, பேச்சுவார்த்தை மற்றும் கலந்தாய்வு மூலம் அமைதி முறையில் சர்ச்ச்சையைத் தீர்த்து வருகின்றது. சீன பல்வேறு நாடுகள் சட்டப்படி தென் சீனக் கடலில் மேற்கொள்ளும் கப்பல் பயணம் மற்றும் விமான பறத்தல் நடவடிக்கை சுதந்திரத்தைப் பேணிக்காக்கும் என்று வாங்யீ தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040