"மொத்த தேவையை உரிய முறையில் விரிவாக்கி, வினியோகக் கட்டமைப்பு சீர்திருத்தத்தை முக்கிய நெறியாக முன்னேற்றும் போக்கில், பயன்மிக்க முதலீடு முக்கியத்துவம் வாய்ந்தது. தற்போது சமூக முதலீடு, குறிப்பாக அரசு சாரா முதலீட்டின் அதிகரிப்பு விகிதம் வீழ்ச்சியடைந்து வரும் பிரச்சினையை முக்கியமாக தீர்க்க வேண்டும்" என்றார் அவர்.
சமூக நிதி வினியோக்கத்துக்கு வழிகாட்டலை வலுப்படுத்தி, உற்பத்தி திறன் அளவுக்கு மீறி அதிகரித்து வரும் தொழில்கள், சுற்றுச்சூழல் மீது மாசுபாட்டை ஏற்படுத்தும் தொழில்கள் ஆகியவற்றுக்கு நிதி வழங்குவதை தவிர்க்க வேண்டும். கட்டமைப்பை மேம்படுத்தல், புத்தாக்கம் செய்தல், புதிய இயக்கு ஆற்றலை வளர்த்தல், பொது மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தல் ஆகிய துறைகளில் நிதியை வினியோகிக்க வேண்டும் என்று லீ கெச்சியாங் தெரிவித்தார்.
சமூக முதலீட்டின் உயிராற்றலை எழுப்புவது, வளர்ச்சி மற்றும் சீர்திருத்தம் தொடர்பான பிரச்சினையாகும். சீர்திருத்தம் மூலம், சமூக முதலீட்டு அதிகரிப்பை விரைவுபடுத்த வேண்டும் என்றும் லீ கெச்சியாங் சுட்டிக்காட்டினார். அவர் கூறியதாவது:
"சீர்திருத்தத்தை விரைவாக முன்னேற்றி, பயன்மிக்க முதலீடு மீதான தடைகள் குறிப்பாக சமூக முதலீட்டின் சீரான வளர்ச்சி மீதான தடைகளை நீக்க வேண்டும். சந்தை நுழைவுக்கு அனுமதி வழங்கி, நிர்வாக ஒழுங்கு முறையை எளிதாக்க வேண்டும்" என்றார் அவர்.
முதலீட்டு வழிமுறையைப் புத்தாக்கம் செய்து, விலைவாசி சீர்திருத்தத்தை ஒருங்கிணைந்த முறையில் முன்னேற்றி, அரசு நிதிக்கும் சமூக நிதிக்கும் இடையேயான ஒத்துழைப்பு மாதிரியைப் பரவல் செய்து மேம்படுத்த வேண்டும். அடிப்படை வசதிகளின் கட்டுமானத் துறையில் முதலீட்டு அளவை விரிவாக்கி, சமூக சேவைத் துறையில் சமூக முதலீட்டை வினியோகிக்க வேண்டும் என்றும் லீ கெச்சியாங் தெரிவித்தார்.