சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம், சீனப் போக்குவரத்து அமைச்சகம், இருப்புப் பாதைப் பொது நிறுவனம் ஆகியவை, அண்மையில், சீனாவின் இடைக்கால மற்றும் நீண்ட கால இருப்புப் பாதை தொடரமைப்பு வளர்ச்சி வரைவுத் திட்டம் ஒன்றை வெளியிட்டன. சமூக முதலீடு இருப்புப் பாதையின் கட்டுமானத்தில் ஆக்கப்பூர்வமாகப் பங்கெடுக்க இவ்வரைவுத் திட்டம் ஊக்கமளிக்கிறது. தற்போதைய சீனத் தேசிய இருப்புப் பாதை, சமூக முதலீடுகளை வரவேற்கிறது என்று சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் தொடர்புடைய பொறுப்பாளர் ஒருவர் 20ஆம் நாள் எடுத்துக்கூறினார்.
சீனாவின் உயர் வேக இருப்புப் பாதை தொடரமைப்பு, சாதாரண வேக இருப்புப் பாதை தொடரமைப்பு, பன்நோக்கப் போக்குவரத்து மையம் முதலியவற்றில் இவ்வரைவுத் திட்டத்துடன் தொடர்புடைய வரைவுகள் வகுக்கப்பட்டுள்ளது. மேலும், இத்தொடர்புடைய தொடரமைப்பின் கட்டுமான குறிகோள்களையும் இவ்வரைவுத் திட்டம் உறுதிப்படுத்தியுள்ளது. இது குறித்து, சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் அடிப்படைத் தொழிற்துறை பிரிவின் தலைவர் ஃபெ ஷ் ரொங் கூறியதாவது
2020ஆம் ஆண்டு வரை, ஒரு தொகுதியான, சின்னமுடைய, முக்கியமான திட்டப்பணிகள் வெகுவிரைவில் உற்பத்தியில் இறங்கும். இதனால், இருப்புப் பாதை தொடரமைப்பு அளவு ஒரு இலட்சத்து 50 ஆயிரம் கிலோமீட்டரை எட்டும். இதில் உயர் வேக இருப்புப் பாதையின் நீளம் 30ஆயிரம் கிலோமீட்டரை எட்டும். சீனாவின் சுமார் 80 விழுக்காட்டு நகரங்கள் இதன் மூலம் இணைக்கப்படும். 2025ஆம் ஆண்டு வரை, இருப்புப் பாதையின் தொடரமைப்பு ஒரு இலட்சத்து 75 ஆயிரம் கிலோமீட்டரைத் தாண்டும். இதில், உயர் வேக இருப்புப் பாதையின் தொடரமைப்பு சுமார் 38 ஆயிரம் கிலோமீட்டர் உள்ளது. அதற்குப் பிறகு, இருப்புப் பாதையின் பரவல் தொடர்ந்து அதிகரிக்கும். அப்போது, இருப்புப் பாதையின் தொடரமைப்பு மேலும் மேம்படுத்தப்படும். 2030ஆம் ஆண்டுக்குள், மாநகரங்களுக்கிடையில் குறிப்பாக, பல்வேறு மாநிலங்களின் தலைநகரங்களுக்கிடையில் இருப்புப் பாதையின் மூலம் வேகமாகவும் வசதியாகவும் பயணம் மேற்கொள்ளலாம். சீனாவின் மாவட்டங்களும், தேசிய இருப்புப் பாதை தொடரமைப்பில் அடக்கம் என்றார் அவர்.
தற்போது, சீனாவின் இருப்புப் பாதையின் கட்டுமானத்திற்கான முதலீடு, ஆண்டுக்கு சுமார் 80 ஆயிரம் கோடி யுவானாகும். இருப்புப் பாதை கட்டுமானத்தின் தொடர்புடைய முதலீடு, குறிப்பாக, உயர் வேக இருப்புப் பாதையின் முதலீட்டுத் தொகை மிகவும் கணிசமாக விளங்குகிறது. முதலீடுகளைத் திரட்டி, தேசிய இருப்புப் பாதையின் கட்டுமானத்தை நிறைவேற்றும் சாத்தியம் மற்றும் தேவையையும் இவ்வரைவு திட்டம் வழங்கியுள்ளது. எதிர்காலத்தில், இருப்புப் பாதையின் கட்டுமானத்தில் சமூக முதலீடு நுழைய சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம் ஊக்குவிக்கிறது என்று இவ்வாணையத்தின் அடிப்படைத் தொழிற்துறை பிரிவின் தலைவர் ஃபெ ஷ் ரொங் சுட்டிக்காட்டினார்.