பிரிக்ஸ் நாடுகளின் புதிய வளர்ச்சி வங்கி ஜூலை 21ஆம் நாள் வரை ஓராண்டு இயங்கி வருகிறது. அதன் முதலாவது செயற்குழு ஆண்டு கூட்டம் ஷாங்காயில் நடைபெற்றது. கடந்த ஓராண்டில் இவ்வங்கியின் பல்வேறு பணிகள் முன்னேறி வருகின்றன.
இவ்வாண்டின் ஏப்ரல் இவ்வங்கி வழங்கும் முதலாவது கடன் வெளியிடப்பட்டது. 81 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள கடன், சீனா, இந்தியா, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்காவின் பசுமையான எரியாற்றல் திட்டப்பணிக்கு ஆதரவளிக்கும். ஜூலை 20ஆம் நாள், ரஷியாவின் நீர் மின்சார திட்டப்பணிக்கு 10 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள கடனை இவ்வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. வளரும் நாடுகளின் அடிப்படை வசதி கட்டுமானத்துக்கு இவ்வங்கி முக்கிய பங்காற்றும் என்று தென்னாப்பிரிக்க பொருளிலயாளர் சாபி லெவொகா கூறினார்.
புதிய வளர்ச்சி வங்கி, வளரும் நாடுகளின் அடிப்படை வசதிக்கு நிதி திரட்டி, உலக நிர்வாக நிலையை உயர்த்தி, உலகப் பொருளாதார மறுமலர்ச்சிக்கு துணை புரியும். நிதி உதவி, வளரும் நாடுகளுக்கு மிகவும் தேவையானது என்றார் அவர்.
இவ்வாண்டும் அடுத்த ஆண்டும், இவ்வங்கி 1000 கோடி ரென்மின்பி கடன் பத்திரம் வெளியிடும். சீன நிதியமைச்சகத்தின் சர்வதேச நிதி மையத் தலைவர் சொ ச்சியாங்வூ கூறியதாவது
புதிய வளர்ச்சி வங்கி, நிதி திரட்டல் செலவை மேலும் குறைக்க பாடுபடும். சர்வதேச மதிப்பீடு அமைது, அதன் நம்பிக்கை நிலையை உயரமாக மதிப்பீடு செய்ய வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.
பிரிக்ஸ் நாடுகளின் புதிய வளர்ச்சி வங்கி, அறவு தன்மை வாய்ந்த மேலதிக பொது சேவை வழங்க வேண்டும் என்று ஷாங்காய் சர்வதேச பிரச்சினை ஆய்வகத்தின் தலைவர் சென்துங்சியாவ் கூறினார்.
இந்த வங்கி, அறிவு சேவை எனும் பங்கு ஆற்ற வேண்டும். இது, பிரிக்ஸ் நாடுகள் மற்றும் வளரும் நாடுகளின் எதிர்பார்ப்பு ஆகும். அதன் ஆராய்ச்சி பங்கு மிக முக்கியது. உலக தொடரவல்ல வளர்ச்சிக்காகவும் தெற்கு தெற்கு ஒத்துழைப்புக்காகவும் அது பங்காற்ற வேண்டும் என்றார் அவர்.
அடுத்த கட்டத்தில், இவ்வங்கி, ஆப்பிரிக்காவிலான அடிப்படை வசதி திட்டப்பணிகளுக்கு நிதானமான அதிகமாந நிதி திரட்டல் வழங்கும். அது, ஆப்பிரிக்க ஒன்றியத்துடன் ஒத்துழைப்பை வலுப்படுத்தும்.