• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
20 நாடுகள் குழுவின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கித் தலைவர்கள் கூட்டம்
  2016-07-25 14:41:36  cri எழுத்தின் அளவு:  A A A   

ஜி-20 என்னும் 20 நாடுகள் குழுவின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கித் தலைவர்களின் 3ஆவது கூட்டம் 24ஆம் நாள் சீனாவின் செங்து நகரில் நிறைவடைந்தது. ஹாங்சோவில் நடைபெறவுள்ள 20 நாடுகள் குழுவின் உச்சிமாநாட்டுக்கு நிதித் துறையில் ஆயத்தம் செய்வது இக்கூட்டத்தின் நோக்கமாகும். பொருளாதார அதிகரிப்பை விரைவுப்படுத்தும் வகையில் அனைத்து கொள்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என்று இக்கூட்டத்தில் கலந்து கொண்ட நாடுகள் வாக்குறுதி அளித்துள்ளன.

மேலும், பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதால் உலகப் பொருளாதாரத் துறையிலும் நிதிச் சந்தையிலும் ஏற்படும் தாக்கத்தைச் சமாளிப்பதற்குத் தயாராக உள்ளோம் என்றும் அவை தெரிவித்துள்ளன. உலகப் பொருளாதாரத்தில் மீட்சி அறிகுறி தென்பட்டுள்ளது. நிதிச் சந்தையில் ஏற்றத்தாழ்வு இன்னும் தெளிவாக உள்ளது.

 தவிர, புவி அமைவு அரசியில் துறையிலான மோதல், பயங்கரவாதம், அகதிகளின் குடியேற்றம் முதலிய பிரச்சனைகள் உலகப் பொருளாதாரச் சூழ்நிலையில் அதிக சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளன என்று இக்கூட்டம் வெளியிட்ட கூட்டறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கூட்டத்தில் கலந்து கொண்ட சீன நிதி அமைச்சர் லோ ச்சிவெய் கூறியதாவது

உலகப் பொருளாதாரம் எதிர்நோக்கும் அபாயங்கள் மற்றும் அறைக்கூவல்கள் பற்றி இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. நாணயக் கொள்கை, நிதிக் கொள்கை, கட்டமைப்புச் சீர்திருத்தம் முதலிய அனைத்து கொள்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுவோம் என்று பல்வேறு நாடுகள் வாக்குறுதி அளித்தன. மேலும், பணி மதிப்பு போர், வர்த்தக பாதுகாப்பு வாதம் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் என்று அவர் கூறினார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவது பற்றி குறிப்பிடுகையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நெருங்கிய கூட்டாளியாக பிரிட்டன் மாற வேண்டும் என்று லோ ச்சிவெய் விருப்பம் தெரிவித்தார்.

தவிர, அண்மையில் உலகப் பல்வேறு நாடுகளில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல்களை மிகவும் வன்மையாகக் கண்டிப்பதாக இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து வடிவத்திலான பயங்கரவாதத்தையும் ஒன்றிணைந்து ஒடுக்க வேண்டும் என்றும், பயங்கரவாத அமைப்புகளின் நிதி திரட்டல் வழிகளையும் தொழில் நுட்பத்தையும் தடுக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் கலந்து கொண்ட பல்வேறு நாடுகள் வலியுறுத்தின.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040